For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தியேட்டர்களுக்குள் கச முசா செய்யும் காதலர்களை அமுக்கி பிடிக்க பிவிஆர் ஏற்பாடு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: தியேட்டர்களுக்குள் காதலர்கள் அத்துமீறுவதை தடுக்க இரவிலும் நன்கு படம் பிடிக்க கூடிய கேமராக்களை தியேட்டர் அரங்கத்திற்குள் பொருத்த பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்க், பீச் போல தியேட்டருக்கும் காதலர்கள் செல்வது வழக்கம். அங்கு விளக்கை அணைத்து படத்தை ஆரம்பித்துவிட்டால், பக்கவாட்டில் இவர்கள் படம் ஓட்ட ஆரம்பித்துவிடுவார்கள். கையை மேலே போடுவது, முத்தமிடுவது உட்பட இன்னும் எழுத்தில் வெளிப்படுத்த முடியாத சேஷ்டைகளும் அங்கு அரங்கேறும்.

PVR Cinemas to install night vision cameras in movie theaters

எனவேதான் கூட்டம் அதிகமில்லாத படம் ஓடும் தியேட்டர்களாக போய் தேர்ந்தெடுத்து படம் பார்ப்பது காதலர்கள் வாடிக்கை. படத்தை கூடுதலாக சில நாட்கள் ஓட்ட காதலர்களை கைகொடுப்பது நிதர்சனம். ஆனால் சில காதலர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிப்போவதால் பிற ரசிகர்கள், குறிப்பாக குடும்பத்தோடு வருபவர்களின் அதிருப்தியை தியேட்டர்கள் சம்பாதிக்கின்றன.

குடும்ப வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக முன்னணி தியேட்டர் நிறுவனமான பிவிஆர் சினிமாஸ், படிப்படியாக தியேட்டர் அரங்கத்திற்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிவிஆர் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் தியேட்டர் அதிபர்கள் வட்டாரங்கள் அப்படியொரு தகவல் இருப்பதாக கூறுகின்றன.

இரவு நேரத்திலும் தெளிவாக படம் பிடிக்கும் கேமராக்களை அரங்கத்திற்குள் பொருத்துவதால், இருட்டிலும் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். ஒரு பக்கம் கிஸ்ஆப்லவ் என்ற பெயரில் நடுத்தெருவில் முத்தமிட அனுமதி கேட்டு போராட்டம் நடக்கிறது. இன்னொரு பக்கம் இருட்டறையில் கூட முத்தம் கொடுக்க விடமாட்டார்கள் போல உள்ளதே..

English summary
When all is said and done about the moral policing along with the Kiss Of Love campaign here is something new. To steer clear of any indecency in the cozy and dark movie theatres PVR Cinemas have come up with a new technique.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X