For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இன்னும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது வேதனை- கைலாஷ்

Google Oneindia Tamil News

டெல்லி: சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்துப் பார்த்து மனம் வெதும்பிப் போய்த்தான் பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பை ஆரம்பித்து குழந்தைத் தொழிலாளர்களைக் காக்கும் சேவையை தொடங்கினேன் என்று கூறியுள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்தி.

அவருக்கும் 2012ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமியான மலாலா யூசபஸாய்க்கும் நோபல் அமைதிப் பரிசு இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடியவர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.

Q&A: Kailash Satyarthi Winner of Nobel Peace Prize 2014Indian child rights activist

30 வருடங்களுக்கு முன்பு எலக்ட்ரிகல் என்ஜீனியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் சத்யார்த்தி. ஆனால் குழந்தைத் தொழிலாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பைத் தொடங்கினார். தனது என்ஜீனியர் வேலையை விட்டு விட்டார்.

இன்று இந்தியாவின் முன்னணி குழந்தைத் தொழிலாளர் மீட்பு இயக்கமாக பச்பன் பச்சாவ் அந்தோலன் உருவெடுத்துள்ளது. இதற்காக சத்யார்த்தி செய்த தியாகங்கள் மிகப் பெரியது.

2011ம் ஆண்டு அவர் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து சில துளிகள் இங்கே.

பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பைத் தொடங்க என்ன காரணம்... சிறு வயதிலேயே எனக்கு குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்த கவலை பெரிதாக இருந்தது. அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதைப் பார்த்து வேதனைப்பட்டுள்ளேன். ஆனால் இதில் நாம் மட்டும் கவலைப்பட்டு ஆகாது, ஒரு இயக்கமாக இதற்காகப் போராட வேண்டும் என்று நான் பின்னர் உணர்ந்தேன்.

மக்களை இணைத்து போராட...

இதற்கான இயக்கத்தை உருவாக்கி அதில் மக்களையும் இணைத்து நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படி உருவானதுதான் பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பு.

சமூகப் பிரச்சினைகளின் கலவை...

குழந்தைத் தொழிலாளர்கள் என்பது சாதாரண பிரச்சினை அல்ல, பொருளாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல, சட்டப் பிரச்சினையும் அல்ல. அது பல்வேறு விதமான சமூகப் பிரச்சினைகளின் கலவையாகும்.

முக்கிய லட்சியம்...

சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் மிக மோசமான விஷயமாகும். இதை முற்றாக அழிப்பதே எனது இயக்கத்தின் முக்கிய லட்சியம்.

மிகத்தீவிரமான பிரச்சினை...

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை மிகத்தீவிரமாக உள்ளது. இதுவேகமாகப் பரவியும் வருகிறது. மாநிலங்களுக்கு இடையே குழந்தைகளை வேலைசெய்வதற்காக கடத்துவது அதிகரித்தபடி உள்ளது. இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மிக மிக குறைவாக உள்ளன.

அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்...

பீகாரிலிருந்து டெல்லிக்கு குழந்தைகளை கடத்துகிறார்கள். மும்பைக்குக் கொண்டு செல்கிறார்கள். கொல்கத்தா கொண்டு செல்கிறார்கள். இது அதிகரித்தவண்ணம் உள்ளது.

கொத்தடிமைகளாகின்றனர்...

இப்படி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழந்தைகளை கடத்துகிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களில் 20 சதவீதம் பேர் அதாவது 10 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர் என்பது அதிர்ச்சியான விஷயம்.

கொத்தடிமை பெற்றோரின் குழந்தைகள்...

பெரும்பாலான குழந்தைகள் கொத்தடிமைப் பெற்றோர்களுக்குப் பிறக்கின்றன. பிறந்ததுமே அதுவும் கொத்தடிமை முறைக்குள் வந்து விடுகிறது. இது மிகக் கொடுமையானது.

முக்கிய நகரங்களில்...

குழந்தைகள் கடத்தல் அதிகம் நடப்பது டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்களில்தான். இதேபோல பிற பெருநகரங்களிலும் உள்ளன.

விபச்சாரம், வீட்டு வேலைகள்...

பல பெண் குழந்தைகளைக் கடத்தி விபச்சாரத்திலும் ஈடுபடுத்துகிறார்கள். வீட்டு வேலைகளுக்கு பெருமளவில் குழந்தைகளை கடத்துகிறார்கள்,.

மும்பை செல்லும் குழந்தைகள்...

பீகாரில் இப்படி கடத்தப்படும் குழந்தைகள் அதிகம் உள்ளன. ஜார்க்கண்டிலும் அதே நிலைமைதான். சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கத்திலும் இதே நிலைதான். ராஜஸ்தானிலிருந்து கடத்தப்படும் குழந்தைகள் அகமதாபாத், மும்பைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சோகமான விஷயம்...

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இதுபோன்ற குற்றங்களை, சமூக அவலத்தை தடுக்க முடியாமல் இருப்பது மிகவும் சோகமான விஷயமாகும் என்றுகூறியுள்ளார் சத்யார்த்தி.

English summary
Indian child rights activist Kailash Satyarthi was awarded the NobelPeace Prize on Friday shared with Pakistani schoolgirl MalalaYousafzai who was shot by the Taliban in 2012. Some edited excerpts ofan interview with Mr. Satyarthi in 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X