For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடங்க மாட்டேங்கிறாரே இந்த கந்தீல் பலூச்: இப்ப ஷாருக்கானுக்காக ஒரு வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: வீடியோ மேல் வீடியோ வெளியிடும் பாகிஸ்தான் மாடலான கந்தீல் பலூச் தற்போதும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இம்முறை பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்காக.

பாகிஸ்தான் மாடலான கந்தீல் பலூச் என்றால் யார் என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவர் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆனார். அதில் இருந்து அவ்வப்போது வீடியோ வெளியிடுவதையே வேலையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்காக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

பாலிவுட்டின் கிங் கானுக்காக ஒரு சிறப்பு தகவல் வைத்துள்ளேன். ஐபிஎல் போட்டியில் உங்களின் கேகேஆர் அணி வெற்றி பெற்றால் அதை அனைவரும் வியக்கும் வகையில் நான் கொண்டாடுவேன் என வாக்குறுதி அளிக்கிறேன். அந்த வெற்றியை என் பாணியில் கொண்டாடுவேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்தால் தான் நிர்வாணமாக நடனமாடுவதாக அறிவித்தவர் கந்தீல் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistani model Qandeel Baloch has released a video again. This video is for Bollywood star Shahrukh Khan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X