For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த "பைத்தியத்தை" வைத்துக் கொண்டு எப்படி இந்தியாவை ஜெயிக்க முடியும்... குமுறும் பாக். நடிகை!

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை குவான்டீல் பலூச் என்பவர், அந்த நாட்டு கிரிக்கெட் அணி கேப்டன் ஷாஹித் அப்ரிதியை தாறுமாறாக திட்டியுள்ளார். பைத்தியம் என்று வர்ணித்துள்ளார். இந்தியாவிடம் தோற்றுப் போய் பாகிஸ்தான் மக்களை அவர் துயரத்தில் ஆழ்த்தி விட்டதாகவும் குமுறியுள்ளார்.

அது என்னவோ தெரியலை.. என்ன மாயமோ புரியலை.. கிரிக்கெட்டை வைத்துத்தான் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தேசபக்தியை ஓவராக வெளிப்படுத்துகிறார்கள்.

கிரிக்கெட்டில் இரு நாடுகளும் மோதும் போது யார் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி தேசபக்தியோடு லிங்க் பண்ணி விடுகிறார்கள். அந்த வகையில் ஆசியாக் கோப்பைப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்த நாட்டில் பெரும் "பிரளயமே" வெடித்துள்ளதாம்.

பொட்டியைப் போட்டு நொறுக்கு

பொட்டியைப் போட்டு நொறுக்கு

லாகூரில் பல இடங்களில் கும்பலாக கூடி போட்டியை ரசித்துப் பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் தோற்றுப் போனதால் கோபமடைந்து டிவி பெட்டிகளை அடித்து உடைத்தனராம்.

வீரர்களுக்கு எதிராக கொந்தளிப்பு

வீரர்களுக்கு எதிராக கொந்தளிப்பு

வீரர்களுக்கு எதிராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் அந்த நாட்டு ரசிகர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். பல இடங்களில் வழக்கம் போல கொடும்பாவிகளையும் எரித்துள்ளனர்.

நடிகையின் கோபாவேசம்

நடிகையின் கோபாவேசம்

இந்த நிலையில் அந்த நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் என்பவர் ரொம்ப காட்டமாக திட்டியுள்ளார் கேப்டன் அப்ரிதியை. பைத்தியம் என்று திட்டியுள்ளார்.

நான் சொல்லலே!

நான் சொல்லலே!

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சொல்லலை. இந்த மாதிரி பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது. விரைவில் உலகக் கோப்பை வேறு வருகிறது.

வெட்கம்!

வெட்கம்!

இப்படிப்பட்ட நிலையில் நமது அணியின் நிலையைப் பாருங்கள். வெட்கமாக இல்லை. அவமானமாக இருக்கிறது எனக்கு என்று ரொம்பவே சீன் போட்டுள்ளார் குவான்டீல்.

இவங்க யாரு தெரியுமா?

இந்த குவான்டீல் ரொம்ப விஷமம் பிடிச்ச பெண்தான். காரணம்,நமது பிரதமர் மோடியை அவமரியாதையாகப் பேசி மிரட்டி வீடியோவில் பேசி அது பேஸ்புக்கில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

டார்லிங்!

அந்த வீடியோவை அவர் தனது பேஸ்புக்கில் போட்டிருந்தார். அதில் மோடியை டார்லிங் என விளித்திருந்த அவர், பாகிஸ்தானியர்கள், மோடியை மிரட்ட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

என்னம்மா நீங்க.. இப்படி பேசுறீங்களேம்மா..!

English summary
After India defeated Pakistan by five wickets in the Asia Cup cricket match at Sher-e-Bangla National Stadium, a large number of fans who had gathered at different spots in Pakistan's biggest city Karachi on Saturday to watch the match on giant screens amidst an atmosphere of festivity were left upset and angry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X