For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழில் பேசக் கூடாது.. லோக்சபாவில் தம்பிதுரைக்கு எதிராக முழங்கிய பாஜக!

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி லோக்சபாவில் தமிழில் பேசிய எம்.பி தம்பித்துரைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தமிழில் பேசிய அதிமுக எம்.பி தம்பித்துரைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கிய பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் கூட்டு கூட்டம் நடைபெற்றது.

Quit India Movement - M. Thambidurai speaks in Tamil in LS

முதலில் பேசிய பிரதமர் மோடி, இந்திய சுதந்திரத்திற்கு போரடிய வீரர்களை நினைவு கூர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தம்பித்துரை, இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது
தமிழக மக்கள் பலர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பலதரப்பட்ட மக்கள் பங்கேற்றனர் என்று கூறினர்.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தம்பித்துரை தமிழில் பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தம்பித்துரைக்கு எதிராக முழக்கமிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

ராஜ்யசபாவில் தமிழில் பேசுவதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இந்தி அல்லது ஆங்கிலத்தில் அதற்கேற்ப மொழி பெயர்ப்பு வசதி செய்யப்படும் என்று உறுப்பினர்கள் கூறினர். இதனையடுத்து தம்பித்துரை ஆங்கிலத்தில் பேசி தனது கருத்தை பதிவு செய்தார்.

English summary
The Lok Sabha have a special discussion to commemorate the 75th anniversary of Quit India Movement.M. Thambidurai (AIADMK) speaks in Tamil. Members complain that they are not able to get the translation. Mr. Thambidurai speaks in English. He says the translations are available only in English or Hindi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X