For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: காங். துணை தேர்தல் அறிக்கைக்கு பா.ஜ.க. கண்டனம்

By Mathi
|

டெல்லி: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாக கூறும் காங்கிரஸ் கட்சியின் துணை தேர்தல் அறிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி துணை தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பின்தங்கிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து 4.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Quota for Muslims triggers storm

அத்துடன் தலித் சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறியதாவது:

காங்கிரஸ் துணை தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தோற்கும் கட்சியின் துணை தேர்தல் அறிக்கையை யாரும் நம்ப மாட்டார்கள். நாளைக்கே நிலாவை பிடித்து தருவதாக கூட தோற்பவர்கள் வாக்குறுதி அளிப்பார்கள்.

ஆனால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, துணை தேர்தல் அறிக்கையை பற்றி விவாதிக்கக் கூட யாரும் விரும்பவில்லை.

இது, சிறிதளவாவது ஓட்டு வாங்க காங்கிரஸ் செய்யும் கடைசி தந்திரம். ஆனால் அது எடுபடாது.

இவ்வாறு பிரகாஷ் ஜவதேகர் கூறினார்

English summary
A Congress promise of reservation for backward Muslims on Friday kicked up a row with BJP calling it a “last desperate” act on its part to get some votes, a charge rejected outright by Congress which said it has not come out with any supplementary manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X