For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கையையும், காலையும் வெட்டித் தூக்கி எறியனும்.. ராஜ் தாக்கரே ஆவேசம்!

Google Oneindia Tamil News

அகமதுநகர்: சிறுமிகளையும், பெண்களையும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்வோரின் கைகளையும், கால்களையும் தனியாக வெட்டி தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே.

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகருக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கோபமாக பேசினார். மேலும், இஸ்லாமிய நாடுகளில் உள்ளது போன்ற கடுமையான சட்டம் நமது நாட்டுக்கும் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ராஜ் தாக்கரே தனது பேச்சின்போது குறிப்பிட்டதாவது:

கை கால்களை வெட்டி வீச வேண்டும்

கை கால்களை வெட்டி வீச வேண்டும்

பாலியல் பலாத்காரம் செய்வோரின் குறிப்பாக சிறுமிகளை பலாத்காரம் செய்யும் அயோக்கியர்களின் கால்களையும், கைகளையும் துண்டிக்க வேண்டும். அவர்களிடம் ஈவு இரக்கமே காட்டக் கூடாது.

கை கால்களை வெட்டி வீச வேண்டும்

கை கால்களை வெட்டி வீச வேண்டும்

பாலியல் பலாத்காரம் செய்வோரின் குறிப்பாக சிறுமிகளை பலாத்காரம் செய்யும் அயோக்கியர்களின் கால்களையும், கைகளையும் துண்டிக்க வேண்டும். அவர்களிடம் ஈவு இரக்கமே காட்டக் கூடாது.

செயலிழந்து போன மகாராஷ்டிர அரசு

செயலிழந்து போன மகாராஷ்டிர அரசு

அகமதுநகரில் 15 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். மாநில அரசு செயலிழந்து போய்க் கிடக்கிறது. கடந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அரசை விட இப்போதைய பாஜக அரசு ரொம்ப மோசம்.

இஸ்லாமிய சட்டம் தேவை

இஸ்லாமிய சட்டம் தேவை

இஸ்லாமிய நாடுகளில் உள்ளது போன்ற சட்டம் நமது நாட்டுக்குத் தேவை. அப்போதுதான் குற்றங்களைத் தடுக்க முடியும். பெண்கள், குழந்தைகள், சிறுமிகளைக் காப்பாற்ற முடியும். சமூக விரோதிகளை ஒழித்துக் கட்ட முடியும் என்றார் அவர்.

பட்னாவிஸ் சந்தித்தார்

பட்னாவிஸ் சந்தித்தார்

முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குச் சென்ற மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அங்கு சிறுமியைச் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
MNS leader Raj Thackeray wants Sharia type law in India to control the serious crimes like rape.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X