For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேடார் பற்றிய மோடி பேச்சு.. பிரியங்கா காந்தி எப்படி கலாய்க்கிறார் பாருங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    Priyanka Mocks Modi | ரேடார் பற்றிய மோடி பேச்சு!.. கலாய்க்கும் பிரியங்கா காந்தி- வீடியோ

    போபால்: பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய பாதுகாப்பு துறை வல்லுநர், என்று கிண்டல் செய்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி, பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

    அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மேகமூட்டம், ரேடார் தொடர்பாக குறித்து தெரிவித்த கருத்துக்களை, தனக்கே உரித்தான கிண்டல் பாணியில் பதிலடி கொடுத்தார் பிரியங்கா.

    3வது அணி வராதுங்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.. ஒரு வேளை அமைச்சர் பதவி கொடுத்தா வேண்டாம்னு மறுப்பாரா 3வது அணி வராதுங்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.. ஒரு வேளை அமைச்சர் பதவி கொடுத்தா வேண்டாம்னு மறுப்பாரா

    வல்லுநர்

    வல்லுநர்

    பிரியங்கா காந்தி பேசியதை பாருங்கள்: நமது நாட்டின் பிரதமர் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு துறை வல்லுநர். அவரே இந்த நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தேவையான விமானங்களை யார் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை கூட தீர்மானித்து விடுவார். வாழ்க்கையில் ஒரு விமானத்தை கூட தயாரிக்காத, நிறுவனத்திற்கு விமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை தூக்கி தருவார். நிலம் கொடுப்பார். மேக மூட்டம் இருந்தால் போர் விமானங்களை, எதிரி நாட்டு ரேடார் கருவிகள் கண்டுபிடிக்க முடியாது என்றும் தீர்மானிப்பார். இவ்வாறு பிரியங்கா காந்தி கிண்டலாக தெரிவித்தார்.

    ரபேல் ஒப்பந்தம்

    ரபேல் ஒப்பந்தம்

    "ரஃபேல் போர் விமானங்களுக்கான இந்திய, கூட்டாளியாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்கிவிட்டார்.. இது முறைகேடு" என்று காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். மேலும் 36 ரஃபேல் போர் விமானங்களுக்கு, காங்கிரஸ் தலைமையிலான அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும், மோடி அரசு அதிக விலை கொடுத்து விமானங்களை கொள்முதல் செய்ய முன்வந்துள்ளது என்பதும் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டு ஆகும்.

    மேக மூட்டம் ரேடார்

    மேக மூட்டம் ரேடார்

    இந்த நிலையில்தான் பிரதமர் மோடி சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் விமானப்படை தாக்குதல் நடத்தி, தீவிரவாத முகாம்களை அறிவித்ததன் பின்னணியில், தனது யோசனை முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தார். மேகமூட்டமாக உள்ள காலமாக பார்த்து நமது விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றுதான் தான் அறிவுறுத்தியதாகவும், அப்படி சென்றால் பாகிஸ்தானின் ரேடார் கருவிகள் கண்டு பிடிக்க முடியாது என்பது தனது யோசனை என்றும் தெரிவித்தார்.

    கிண்டல்கள்

    ரேடார் கருவிகள், மேகமூட்டம், கடுமையான மழை போன்ற எந்த ஒரு இயற்கை சீற்றங்களாலும், பாதிக்கப்படாது, துல்லியமாக விமான போக்குவரத்தை கண்காணிக்க கூடியது என்பதுதான் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கருத்தாக உள்ளது. ஆனால், பிரதமர் மோடி, மேக மூட்டம் இருந்தால், ரேடார் கருவிகள் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரபேல் ஒப்பந்தத்துடன் இந்த விவகாரத்தை இணைத்து கிண்டல் செய்துள்ளார் பிரியங்கா காந்தி.

    English summary
    Congress leader Priyanka Gandhi mocks Prime Minister Narendra Modi for his comment on radar and clouds with a raffle angle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X