For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்த ''ராணுவ ரகசியம்'' இதுதானா? 2014ல் மோடியுடன் பிரான்ஸ் சென்ற அம்பானி.. வெளியான ரபேல் ஆதாரம்!

ரபேல் ஒப்பந்தம் செய்வதற்காக பிரதமர் மோடியுடன் 2014ல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானியும் பிரான்ஸ் சென்றது அம்பலமாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் செய்வதற்காக பிரதமர் மோடியுடன் 2014ல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானியும் ''ரகசியமாக'' பிரான்ஸ் சென்றது அம்பலமாகி உள்ளது.

இந்தியாவில் பாஜக செய்த மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல் உருவெடுக்கும் நிலையை எட்டியுள்ளது. ஆம், இதில் கிட்டத்தட்ட பாஜகவிற்கு எதிரான சாட்சியங்கள் எல்லாம் தயாராகிவிட்டது என்று கூட கூறலாம். இதுவரை இந்தியாவில் நடந்த ஊழல்கள் எல்லாம் அதிகபட்சம் இந்தியாவிற்குள்ளாகவே இருந்தது. ஆனால் ரபேல் ஊழல் பிரான்ஸ் வரை சென்று சேர்ந்து இருக்கிறது.

இதன் காரணமாகவே அகண்ட பாரத கனவில் இருக்கும் பாஜகவின் பெயர் உலகம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. ரபேல் விமானம் வாங்கியதில் மொத்தமாக ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.

காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த இறுதி விலையை விட அதிக விலையில் விமானங்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பாஜக மறைமுகமாக ஆதாயம் அடைந்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்தது.

பிரான்ஸ் குண்டு

பிரான்ஸ் குண்டு

இந்த நிலையில்தான் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே (மோடியுடன் இவரது தலைமையிலான அப்போதைய அரசுதான் ரபேல் ஒப்பந்தம் செய்தது) ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். முதலில் காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ பங்குதாரர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் நிறுவனம்தான் (அரசின் பொதுத்துறை நிறுவனம்). ஆனால் மோடி தலைமையிலான அரசு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக் கொள்ள கூறியது என்று தெரிவித்தார்.

அம்பானி

அம்பானி

இந்த நிலையில் 2014ல் பிரான்ஸின் அப்போதைய அதிபர் ஹாலண்டே இந்திய வருகிறார். அதன்பின் ஒப்பந்தம் குறித்த முடிவுகள் கையெழுத்து ஆகிறது (அப்போது வரை ஹிந்துஸ்தான் நிறுவனம் நீக்கப்படவில்லை). ஆனால் 2014ல் மீண்டும் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். அப்போதுதான் ஒப்பந்தத்தில் இருந்து ஹிந்துஸ்தான் நிறுவனம் நீக்கப்பட்டு, ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ பங்குதாரராக நியமிக்கப்படுகிறது.

பெயர் இல்லை

பெயர் இல்லை

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்று ஹாலண்டேவை சந்தித்த போது அவருடன் அனில் அம்பானியும் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பாஜக மறைத்து இருக்கிறது. அதாவது பிரான்ஸ் அதிபர்-மோடி பேச்சுவார்த்தை நடத்திய போது அங்கு அனில் அம்பானியும் இருந்தார் என்று கூறப்படுகிறது. இதை பாஜக மறைத்தும் இருக்கிறது.

வெளியே வந்தது

இந்த நிலையில்தான் தற்போது பிரான்ஸ் அரசின் அப்போதைய ''மீட்டிங்'' விவரங்கள் முன்னாள் அதிபர் ஹாலண்டே மூலம் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த மீட்டிங்கில் அனில் அம்பானி கலந்து கொண்டார், அதன் விவரம் இதோ என்று அப்போது கலந்து கொண்டவர்கள் பெயரை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இந்தியா வெளியிட்ட நிகழ்ச்சி நிரலில் அம்பானி பெயர் ''மிஸ்ஸிங்''. இது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தை காங்கிரஸ் கட்சி பெரிய பிரச்சனையாக மாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய அந்த ராணுவ ரகசியம் இதுதான் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

English summary
Rafale Deal: Big blow for BJP after France released its meeting details with Anil Ambani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X