For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார்க்கண்ட் முதல்ராக ரகுபர் தாஸ் பதவியேற்றார்.... பனிமூட்டம் காரணமாக மோடி வரவில்லை!

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பழங்குடியினத்தைச் சேராத முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ரகுபர்தாஸ் இன்று அம்மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா கால்பந்து மைதானத்தில் நடந்த நிகழ்த்தியில் தாஸ் முதல்வராக பதவியேற்றார். அவருடன், நான்கு அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

Raghubar Das sworn-in as Chief Minister of Jharkhand

அமைச்சர்கள் விவரம் - நீல்கந்த் சிங் முண்டா, சந்திரஸேவர் பிரசாத் சிங், லூயிஸ் மராண்டி, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியனைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் செளத்ரி.

முன்னதாக பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமீத் ஷா ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் அவர்களால் விமான பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் வரவில்லை.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ரகுபர் தாஸ் பதவியேற்பு விழாவுக்குப் போகவிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

ரகுபர் தாஸுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கும் அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள் என்று மோடி தெரிவித்திருந்தார்.

ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் இணைந்து 42 தொகுதிகளை வென்றுள்ளன. பாஜக தனிப்பெரும் கட்சியாக 37 இடங்களை வென்றது. மாணவர் யனியன் 5 இடங்களில் வென்றது.

கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியிலிருந்து 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் தாஸ். இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் இல்லை. இதுவரை ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியில் பழங்குடியனத்தைச் சேர்ந்தவர்களே அமர்ந்துள்ளனர். முதல் முறையாக பழங்குடியினர் அல்லாத முதல்வராக தேர்வாகியுள்ளார் தாஸ்.

2000மாவது ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னற் அங்கு 9 அரசுகள் அமைந்துள்ளன. மூன்று முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Raghubar Das has been sworn-in as Chief Minister of Jharkhand today at Ranchi. Nilkanth Singh Munda, Chandreswar Prasad Singh, Chandraprakash Choudhary and Louis Marandi were sworn-in as cabinet ministers in Jharkhand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X