For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 மாத பிளான்.. ரகுராம் ராஜன் ஆலோசனை வழங்கினார்.. குறைந்த பட்ச ஊதியம் குறித்து ராகுல் விளக்கம்!

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் அளிக்கும் திட்டத்தை உருவாக்குவதில் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் ஆலோசனை வழங்கினார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் அளிக்கும் திட்டத்தை உருவாக்குவதில் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் ஆலோசனை வழங்கினார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ.6000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருக்கிறார். 5 கோடி குடும்பம் இதனால் பயன் அடையும். 25 கோடி ஏழை மக்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.

மாதம் 12,000 கீழ் சம்பாதிக்கும் குடும்பங்கள் இந்த வருமானத்தை பெற தகுதியானவர்கள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 20% பேர் ஊதிய உறுதித் திட்டதால் பயன்பெறுவர், என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பெருகும் வரவேற்பு.. மக்கள் நீதி மய்யத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அதிரடி ஆதரவு! பெருகும் வரவேற்பு.. மக்கள் நீதி மய்யத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அதிரடி ஆதரவு!

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இதுகுறித்து இன்று ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். அதில், பிரதமர் மோடி மக்களை ஏமாற்றினார். அவர் 15 லட்சம் ரூபாய் தருவதாக கூறி மக்களை ஏமாற்றினார். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நாங்கள் இந்த குறைந்தபட்ச சம்பள திட்டத்தை சரியாக திட்டமிட்டு இருக்கிறோம்.

6 மாத உழைப்பு

6 மாத உழைப்பு

நாங்கள் இதற்காக கடந்த 6 மாதமாக உழைத்தோம். பல்வேறு பொருளாதார நிபுணர்களை இதற்காக சந்தித்தோம். இது மிக சரியாக இயங்க கூடிய, செயல்படுத்த கூடிய திட்டம் என்று தெரிந்த பின்தான் இதை வாக்குறுதியாக அளித்து உள்ளோம்.

கட்சிதம்

கட்சிதம்

இதனால் நாட்டில் வறுமை மொத்தமாக ஒழிய போகிறது. இதுகுறித்து நாங்கள் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை கேட்டோம். அவர்கள் சொன்னதை வைத்துதான் இந்த திட்டத்தை கட்சிதமாக வடிவமைத்தோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

யார் ரகுராம் ராஜன்

யார் ரகுராம் ராஜன்

முன்னாள் ஆர்பிஐ கவர்னராக இருந்தவர் ரகுராம் ராஜன். உலகம் முழுக்க இருக்கும் பொருளாதார வல்லுனர்களின் இவரும் முக்கியமான நபர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள பல நாடுகள் மற்றும் பல நிறுவனங்கள் பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளுக்கு இவரை அணுகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Raghuram Rajan helped in planning Minimum Basic Income Scheme says Congress Chief Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X