For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் பண மதிப்பிழப்பு திட்டம்: ரகுராம் ராஜன் சொன்னபடியே நடந்துவிட்டது

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறக்கூடும் என்று கூறப்படும் ரகுராம் ராஜன் மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் பெயர் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Raghuram rajan was never in favour of demonetisation

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் ரகுராம் ராஜன்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாமல் செய்வதால் எதிர்காலத்தில் வேண்டுமானால் நன்மை ஏற்படலாம். ஆனால் தற்போது அதனால் பெரும் பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்று முன்கூட்டியே எச்சரித்தவர் ரகுராம் ராஜன்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பணமதிப்பிழப்பு பற்றி மத்திய அரசு ரகுராம் ராஜனிடம் கருத்து கேட்டபோது இது தேவையில்லாத வேலை என்று தெரிவித்தவர் அவர்.

ரகுராம் ராஜன் எச்சரித்தபடியே பண மதிப்பிழப்பு திட்டத்தால் பாதிப்பு தான் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former RBI governor Rahuram Rajan may get Nobel prize for economics. Rajan was never in favour of demonetisation and warned the central government about its damages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X