For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போதைப் பொருளுடன் எப்.பி.ஐ. யிடம் சிக்கிய ராகுலை வாஜ்பாய் காப்பாற்றினார்..புது குண்டை போடும் சு.சாமி

Google Oneindia Tamil News

டெல்லி : காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் போதைப் பொருள் வைத்து எப்.பி.ஐ. யிடம் சிக்கியதாகவும் அவரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தான் காப்பாற்றினார் என்றும் பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது டெல்லி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி அவர் தனது பிளாக்கில் கூறியுள்ளதாவது...

subramniasamy

கடந்த 2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 1.60 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்து அமெரிக்காவின் பாஸ்டன் விமான நிலையத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கினார்.

உடனே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு போன் செய்து ராகுலை விடுவிக்க உதவுமாறு கேட்டார். வாஜ்பாயும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு போன் செய்து ராகுலை விடுவிக்க வைத்தார்.

மேலும் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, சோனியாகாந்தி அவரை மிரட்டி வந்ததாகவும், அதன் பின்னணியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை குறை கூறும் முன்பு தங்கள் நிலையை முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு தனது பிளாக்கில் சுப்ரமணியஸ்வாமி கூறியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
BJP leader Subramaniam Swamy wrote in his blog alleging Congress vice president Rahul Gandhi was arrested in Boston airport for carrying 1,60,000 USD cash and holding white powder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X