For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.. ராகுல்காந்தி இரங்கல்

ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈராக்கில் 39 இந்தியர்கள் படுகொலை : சுஷ்மா சுவராஜ்- வீடியோ

    டெல்லி: ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    கடந்த 2014ல் ஈராக்கில் 39 இந்தியர்கள் காணாமல் போனார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்தது. அப்போது அவர்கள் அனைவரும் ஈராக்கின் மொசூல் நகரில் அடைத்து வைக்கப்பட்டனர்.

    Rahul Gandhi condoles the family of 39 indians who died in Iraq

    அங்கு உள்ள ஜெயிலில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் 39 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஈராக் சிறையில் 2014 ஆம் ஆண்டில் இருந்து இருந்த 39 இந்தியர்கள் உயிரிழந்தனர் என செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    நிச்சயம் திரும்பி வருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்த அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய பிரார்த்தனை உங்களுடன் இருக்கும் என்றும் ராகுல்காந்தி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Rahul Gandhi condoles the family of 39 indians who died in Iraq.I’m shocked to hear that 39 Indians who were in captivity since 2014, in Iraq, are now confirmed dead Rahul said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X