For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தில் லக்கேஜை வைக்க சிரமப்பட்ட பயணி.. உதவிய ராகுல் காந்தி.. வைரலாகும் போட்டோ!

விமானத்தில் லக்கேஜை வைக்க சிரமப்பட்ட பயணிக்கு ராகுல்காந்தி உதவி செய்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

கவுகாத்தி: விமானத்தில் லக்கேஜை வைக்க சிரமப்பட்ட பயணிக்கு ராகுல்காந்தி உதவி செய்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி மக்களோடு மக்களாக ரயிலில் பயணிப்பது, இருசக்கர ஊர்தியில் செல்வது, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் போது அவர்களுடன் தரையில் சமமாக அமர்வது என மக்களின் மனதை கவரும் வகையில் நடந்துகொள்கிறார்.

செய்திகளில் இடம்பெறவே ராகுல்காந்தி இவ்வாறு நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தான் செய்த ஒரு காரியத்தால் ராகுல்காந்தி மீண்டும் செய்திகளில் வைரலாகியுள்ளார்.

விமானத்தில் பயணம்

விமானத்தில் பயணம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து கவுகாத்திக்கு விமானம் மூலம் புறப்பட்டார். இதற்காக கவுகாத்தி விமானத்தில் தனது ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார் ராகுல்காந்தி.

உதவிய ராகுல்காந்தி

உதவிய ராகுல்காந்தி

அபோது ஒரு பெண் பயணி தனது லக்கேஜை இருக்கைக்கு மேல் உள்ள இடத்தில் வைப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தார். இதனை கண்ட ராகுல் உடனடியாக அந்த பெண்மணியிடம் பெட்டியை வாங்கி மேலே வைக்க உதவி செய்தார்.

செல்பி எடுத்த பயணிகள்

செல்பி எடுத்த பயணிகள்

இதற்காக அந்த பெண் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார். மேலும் விமானத்தில் இருந்த சக பயணிகள் ராகுல் காந்தி தான் பயணம் செய்கிறார் என்று தெரிந்து கொண்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

வைரலாகும் ராகுல்

ராகுல் காந்தி விமானத்தில் உதவி செய்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி உள்ளது.

English summary
Congress president Rahul Gandhi helped his co-passengers by helping them keep the luggage in the overhead cabin space on the Delhi to Guhawati flight yesterday. Rahul gandhi helping photo became viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X