For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவனமாக வேலை பாருங்கள்.. கீழே விழுந்த பத்திரிக்கையாளரை தூக்கிவிட்ட ராகுல்.. வைரல் வீடியோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    கீழே விழுந்த பத்திரிக்கையாளரை தூக்கிவிட்ட ராகுல், வைரல் வீடியோ!

    புவனேஷ்வர்: புவனேஷ்வர் விமான நிலையத்தில் சாலை தடுப்பில் தவறி விழுந்த புகைப்பட நிருபரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேகமாக வந்து தூக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது லோக் சபா தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்த பின் உத்தர பிரதேசம் மீது கவனம் செலுத்துவதை குறைத்துவிட்டு அவர் மற்ற பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

    Rahul Gandhi helps a photographer who fell at Bhubaneswar Airport, Odisha

    இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று ஒடிஷா சென்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.புவேனஸ்வர் விமான நிலையம் வந்த அவர் நாளையில் இருந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் புவனேஷ்வர் விமான நிலையத்தில் ராகுலை காண அதிக அளவில் கூட்டம் கூடி இருந்தது. இந்த கூட்டத்தில் சிக்கிய ஒரு செய்தி நிறுவனத்தின் புகைப்பட நிருபர் ஒருவர், தவறி கீழே விழுந்தார். சாலை தடுப்பில் தடுக்கி அவர் கீழே விழுந்தார்.

    இதை பார்த்த ராகுல் கொஞ்சமும் தாமதிக்காமல் வேகமாக ஓடினார். வேகமாக ஓடி அந்த நபரை வேகமாக தூக்கிவிட்டார். கவனமாக வேலை செய்யுங்கள் என்று ராகுல் அவருக்கு அறிவுரை வழங்கினார். பின் அங்கிருந்தவர்களும் அந்த புகைப்படக்காரருக்கு உதவினார்கள்.

    இந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. ராகுலின் இந்த நடவடிக்கைக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    English summary
    Congress President Rahul Gandhi checks on a photographer who tripped and fell at Bhubaneswar Airport, Odisha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X