For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் பிரதமராவது பகல் கனவு தான்... ராகுல் குறித்து மோடி விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் நாட்டின் பிரதமராவது பகல் கனவு: மோடி விமர்சனம்- வீடியோ

    முசாபர்பூர்: நாட்டின் பிரதமராகி விடலாம் என ராகுல்காந்தி பகல் கனவு காண்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

    பீகாரில் 19 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 21 இடங்களில் வாக்குப்பதிவு மே 6, மே 12 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 5-ம் கட்டமாக நடைபெறும் தேர்தலையொட்டி, பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், நேர்மையற்ற எதிர்க்கட்சியினர், பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

    Rahul Gandhi is dreaming to become prime minister, Modi criticism

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பாஜக ஆட்சியில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். ஊழலை ஒழிக்க மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே, நாட்டின் பாதுகாவலர் என கூறி வரும் பிரதமர் மோடி, நாட்டில் உள்ள தொழிலதிபர்களுக்கு தான் பாதுகாவலாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வீடுகள் முன்பு, எந்த பாதுகாவலர்களும் இல்லை என்றார்.

    திமுக மீதும், ஸ்டாலின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை... தமிழிசை சொல்கிறார் திமுக மீதும், ஸ்டாலின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை... தமிழிசை சொல்கிறார்

    ஆனால், அம்பானி போன்ற தொழிலதிபர்களின் வீட்டின் முன் ஏராளமான காவலாளிகள் நீண்ட வரிசையில் நிற்பதாகவும், அதில் முதல் ஆளாக, பிரதமர் மோடி நிற்பதாகவும் கடுமையாக விமர்சித்தார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக கூறிய பிரதமர் மோடி மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் பேசினார்.

    English summary
    PM Modi Said that Rahul Gandhi is dreaming to become prime minister
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X