For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயல் பாதித்த குமரியில் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல்காந்தி!

குமரி மாவட்டத்தில் மீனவ மக்களை சந்தித்து காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயலால் தென் தமிழகமான குமரி மாவட்டம் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உயிர் சேதம், பொருட்சேதம் என ஏற்பட்டது.

Rahul Gandhi is in Kanyakumari to review Ockhi affected areas

இந்த புயலால் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால்
அவர்களை எதிர்நோக்கி சின்னத்துறையில் கரையிலேயே உறவினர்களும், மீனவர்களும் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் இந்த புயல் கேரள மாநிலத்தையும் பதம் பார்த்ததால் அங்குள்ள பகுதிகளை பார்வையிட ராகுல் காந்தி இன்று காலை சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டம் சின்னத்துறைக்கு வருகை தந்தார்.

அங்கு மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மீனவர்களை மீட்க கோரி கரையில் இருந்த பெண்கள் ராகுலிடம் மனு அளித்தனர். காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக தமிழகம் வந்துள்ளார் ராகுல் காந்தி.

English summary
Rahul Gandhi has come to Kanyakumari to review Ockhi affected areas. Ockhi cyclone attacks South TamilNadu in the last month. He also met Fishermen's relatives those who are still missing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X