For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆல்வார் பலாத்காரம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ராகுல்.. நடவடிக்கை எடுப்பதாக உறுதி

Google Oneindia Tamil News

ஜெய்பூர்: ஆல்வாரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறியதுடன், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி பெண் ஒருவர் தனது கணவருடன் தானாகஜி- ஆழ்வார் பைப்பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 5 பேர் அவர்களை வழிமறித்தது. கணவனை அடித்து உதைத்த அந்த கும்பல், கணவனின் முன்பாக 5 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மாறி, மாறி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மோடிலை.. அட மோடியை கலாய்க்க ராகுல் உருவாக்கிய புதிய வார்த்தை.. அர்த்தம் தெரிஞ்சா அசந்துடுவீங்க! மோடிலை.. அட மோடியை கலாய்க்க ராகுல் உருவாக்கிய புதிய வார்த்தை.. அர்த்தம் தெரிஞ்சா அசந்துடுவீங்க!

ராஜஸ்தானில் போராட்டம்

ராஜஸ்தானில் போராட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தை உலுக்கிய இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த விவகாரம் தீவிரமாக மாறியதை அடுத்து கடந்த மே 2ம் தேதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிகள் கைது

குற்றவாளிகள் கைது

பெண்ணை வன்கொடுமை செய்தது தொடர்பாக 5 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர், பாலியல் வன்கொடுமையால் பெண் பாதிக்கப்பட்ட போது நடந்தவற்றை வீடியோவாக சமூக வலைதளங்களில் பரப்பியவர் ஆவார்.

நடவடிக்கை உறுதி

நடவடிக்கை உறுதி

ராஜஸ்தானில் தேர்தல் நேரத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை குறிப்பிட்டு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அங்கு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தன. இதனால் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களிடம் குற்றாவளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ராகுல் உறுதி

ராகுல் உறுதி

இது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், "ஆழ்வார் பலாத்காரம் விவகாரம் என் கவனத்துக்கு வந்தது. நான் அசோக் கெலாட்டிடம் (ராஜஸ்தான் முதல்வர்) பேசியிருக்கிறேன். இது எனக்கு அரசியல் பிரச்சனை இல்லை. நான் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்தேன். அவர்கள் என்னிடம் குற்றாவளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். குற்றவாளிகள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு கூறினார்.

English summary
Congress leader Rahul Gandhi meets Alwar gangrape victim’s family in rajasthan, promises Action will be taken against culprits
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X