For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று கையில் தவழ்ந்த சிசு.. இன்று பாலகனாகி கையை பிடித்த தருணம்.. ராகுலை சந்தித்த ராஜம்மா நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

வயநாடு: ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என சாட்சி கூறிய செவிலியர் ராஜம்மாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் நிறுவனம் ஒன்றில் ராகுல் காந்தி 2003-ஆம் ஆண்டு இயக்குநராகவும் செயலாளராகவும் இருந்து வருகிறார் என குறிப்பிட்டிருந்தார்.

அது தொடர்பான ஆவணங்கள் ராகுல் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் ஜூன் 19-ஆம் தேதி 1970-இல் பிறந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜம்மா, ராகுல் இந்தியாவில்தான் பிறந்தார் என்றும் அதற்கு நான் சாட்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் யார் பக்கம் என தெரிந்து விட்டது.. மோடியை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.. ராகுலுக்கு அறிவுரை மக்கள் யார் பக்கம் என தெரிந்து விட்டது.. மோடியை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.. ராகுலுக்கு அறிவுரை

சோனியா காந்தி

சோனியா காந்தி

கேரள மாநிலம் வயநாடு அருகே சுல்தான் பத்ரி பகுதியைச் சேர்நதவர் ராஜம்மா (72). இவர் டெல்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு சோனியா காந்தி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

கடந்த 1970-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பிறந்த ராகுல் காந்தியை கையில் ஏந்தினேன் என ராஜம்மா தெரிவித்திருந்தார். இதனால் ராகுல் இந்தியாவில் பிறந்ததற்கு நானே சாட்சி என தெரிவித்திருந்தார். மேலும் 49 வயதாகும் கியூட் பேபி காங்கிரஸ் தலைவராகவும் வயநாட்டில் போட்டியிடுவதையும் நினைத்து மகிழ்கிறேன்.

3 நாள் பயணம்

ராகுல் காந்தி வயநாட்டுக்கு அடுத்த முறை வரும் போது நான் அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன் என தெரிவத்திருந்தார். இந்த நிலையில் வயநாடு எம்பியான ராகுல் காந்தி அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 3 நாள் பயணமாக சென்றுள்ளார்.

ராஜம்மாவை சந்தித்த ராகுல்

ராஜம்மாவை சந்தித்த ராகுல்

அவர் இன்றைய தினம் செவிலியர் ராஜம்மா சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். தான் பார்க்கும் போது குழந்தையாக இருந்த ராகுல் தற்போது பாலகனாகி தன் கைகளை பிடித்த போது ராஜம்மாவுக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.

English summary
Rahul Gandhi meets Rajamma a retired nurse from Wayanad who says that He was born in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X