For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கை கொடுக்காத "சிங்கிள்".. தூள் கிளப்பிய "டிரிபிள்".. ராகுல் அடித்த "சிக்ஸர்"!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: ராகுல் காந்தியின் தேர்தல் வியூகத்திற்கு உ.பியில் கிடைக்காத பலன், குஜராத்தில் கிடைத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்ததரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸின் துணைத் தலைவராக தேர்தலை சந்தித்தார். அத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.

தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்றார். காங்கிரஸோடு, சமாஜ்வாடியும் மண்ணைக் கவ்வியது.

உ.பியில் தோற்ற காங்கிரஸ்

உ.பியில் தோற்ற காங்கிரஸ்

உ.பி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மாபெரும் தோல்வி கிடைக்கக் காரணம், சமாஜ்வாடிக் கட்சியின் உட்கட்சிப் பூசலே முக்கியக் காரணம், அப்பா முலாயமும், மகன் அஏலேஷூம் அடித்துக் கொண்ட காட்சிகளை உ.பி. மக்கள் ரசிக்கவில்லை. இது காங்கிரஸையும் பாதித்தது.

குஜராத்தில் வித்தியாசமான உத்தி

குஜராத்தில் வித்தியாசமான உத்தி

குஜராத்தில் காங்கிரஸ் சற்று வித்தியாசமான உத்தியைக் கடைப்பிடித்தது. துரிதமாக செயல்பட்ட அது ஹர்திக் படேலை கைக்குள் கொண்டு வந்தது. அது பாஜகவுக்கு பாதகமானது. அதேபோல ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் ஆகியோரும் காங்கிரஸுடன் கை கோர்த்தது பாஜகவை நெருக்கடிக்குள்ளாக்கியது.

நான்கு முனைத் தாக்குதல்

நான்கு முனைத் தாக்குதல்

காங்கிரஸும், குஜராத்தின் மூன்று இளைஞர் சக்தியும் இணைந்து பாஜகவை சந்தித்தது அக்கட்சியை நிலை தடுமாற வைத்து விட்டது. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று .சொல்வார்கள். அந்த ரகத்தில்தான் பாஜக வெற்றியைச் சேர்க்க முடியும்.

ராகுல் காந்தியின் அதிரடி

ராகுல் காந்தியின் அதிரடி

இப்படி சரியான கூட்டணியை அமைத்ததோடு இல்லாமல் இதுவரை இல்லாத வகையில் முதிர்ச்சிகரமான பிரச்சாரத்தையும் ராகுல் காந்தி மேற்கொண்டார். இதை பாஜகவினர் எதிர்பார்க்கவில்லை.

கண்ணீரால் கரைத்த மோடி

கண்ணீரால் கரைத்த மோடி

இப்படி எல்லா வகையிலும் காங்கிரஸ் வலுவடைந்து காணப்பட்ட நிலையில்தான் மோடிncnடைசி நேரத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் போய் விட்டதாக சொல்கிறார்கள். இல்லாவிட்டால் காங்கிரஸ் எளிதாக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்பதும் குஜராத் அரசியலை அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.

English summary
Despite the defeat, Rahul Gandhi's alliance has worked out well in Gujarat. Though it has failed to capture the power, the alliance with the trio of Gujarat has given big boost to the Congress, no doubt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X