For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜினாமா கடிதம் தேவை... ஜெயந்தி நடராஜனிடம் கோபமாக 'ஆர்டர்' போட்ட ராகுல்!

By Mathi
Google Oneindia Tamil News

Rahul Gandhi shakes Jayanthi Natarajan
டெல்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்தாக வேண்டும் என்று ராகுல் காந்தி கடும் கோபத்துடன் கூறியதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழன்று ஜெயந்தி நடராஜன் வெளி மாநிலத்தில் இருந்தார். அவரை உடனே டெல்லி திரும்புமாறு ராகுல் உத்தரவிட்டார். இதனால் டெல்லி பறந்து வந்த ஜெயந்தியிடம், உங்கள் ராஜினாமா கடிதத்தை எடுத்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தியோ, ராஜினாமா கடிதமா என கேட்க, ஆமாம் எனக்கு உங்கள் ராஜினமா கடிதம்தான் வேண்டும் என்று கோபமாக ராகுல் கூறியிருக்கிறார். இதன் பின்னரே ராகுலை ராஜினாமா கடிதத்துடன் சந்தித்திருக்கிறார் ஜெயந்தி. அதை படித்துப் பார்த்த கையோடு உடனே பிரதமரிடம் கொடுங்கள் எனவும் ஆர்டர் போட்டாராம்.

எதுவுமே பேசாத ஜெயந்தி, கடிதத்தை பள்ளி மாணவியைப் போல அப்படியே பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கொடுத்து புதுச்சேரியில் நாராயணசாமியின் மனைவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்துவிட்டார். வெள்ளிக்கிழையன்று ஜனாதிபதி சென்னை வந்துவிட்டார். அதனால் ஜெயந்தியின் ராஜினாமாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரவில்லை.

இந்நிலையில்தான் சனிக்கிழமையன்று ஜெயந்தியின் ராஜினமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கையால் தமது இமேஜ் போய்விட்டதே என புலம்புகிறாராம் ஜெயந்தி.

English summary
Sources said, Congress Vice President Rahul gandhi ordered to Jayanthi Nataran to resign from the Union Minister Post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X