For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் பொய் சொல்பவர்.. அமில வார்த்தைகளை வீசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசி வரும் ராகுல்காந்தி, ஒரு வெட்கமில்லாத பொய்யர் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை தொழில் முதலீட்டாளர் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. கடந்த முறை இது போன்ற மாநாட்டில் பங்கேற்ற பிரிட்டன், குஜராத் தொழில் முதலீட்டாளர் மாநாடு 2019ம் ஆண்டு பங்கேற்பதில் இருந்து விலகிகொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் குறை கூறி பதிவிட்டிருந்தார்.

rahul gandhi a shameless liar, desperate to see gujarat fail: chief minister vijay rupani condemned

அவருக்கு பதிலளித்து குஜராத் முதல்வர் ரூபானி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த முறை நடைபெறும் மாநாட்டில், முந்தைய மாநாட்டைக்காட்டிலும் கூடுதலான தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். முந்தைய மாநாட்டில் 10 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. தற்போதைய மாநாட்டில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

ராகுல்காந்தி ஒரு 'வெட்கம் இல்லாத பொய்யர்'. இம்முறை குஜராத் மாநாட்டில் அதிகளவிலான முதலீட்டாளர்கள் பங்கேற்கப் போவது உறுதி. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நீங்கள், குஜராத் தோல்விப்பாதையில் செல்ல வேண்டும் என்பதையே விரும்புகிறீர்கள்.

குஜராத் மக்கள் உங்கள் வெறுப்புணர்வை புரிந்துக் கொண்டதாலேயே தொடர்ந்து காங்கிரசை புறக்கணிக்கின்றனர். பிரதமர் மோடியை விமர்சனம் செய்த ராகுல், தன்னை சுற்றிலும் மோசமான ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு அவர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்கும் வகையில் முதலீட்டாளர் மாநாட்டை குறை கூறுகிறார்.

மோடியை சுற்றிலும் இழிவான ஆதரவாளர்கள் யாரும் இல்லை. அதனால் அவர் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்கிறார். ஆனால், ராகுல்காந்தி பொய் கூறுவதால் அந்த நிலையை அடைய முடியவில்லை என்று முதல்வர் ரூபானி தெரிவித்துள்ளார்.

English summary
Rahul Gandhi a shameless liar, desperate to see Gujarat fail says Gujarat Chief Minister Vijay Rupani. He also said that, people of Gujarat have recognized Gandhi's "hatred" for the state and continuously rejected the Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X