For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் கொள்கைகளால் 1 கோடி வேலைவாய்ப்புகள் அழிப்பு… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

திரிபுரா: மோடியின் கொள்கைகளால் 2018 -ல் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திரிபுராவில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்குள்ள குமுல்வாங்க் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

Rahul Gandhi in Tripura: Modi’s policies destroyed 1 crore jobs in 2018

அப்போது, இந்தியாவில் ஒரு நாளைக்கு 450 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக தான் நினைத்துக் கொண்டு இருந்ததாகவும், ஆனால் நாளொன்றுக்கு 27 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அழிக்கப்பட்டு வருவதாக பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியை சுட்டிக்காட்டிப் பேசினார்.

காவலாளிகளை தவறாக சித்தரிக்கும் செய்திக்கு வருத்தம் தெரிவித்த மோடி.. கலந்துரையாடலில் உருக்கமான பேச்சுகாவலாளிகளை தவறாக சித்தரிக்கும் செய்திக்கு வருத்தம் தெரிவித்த மோடி.. கலந்துரையாடலில் உருக்கமான பேச்சு

மேலும், பிரதமர் மோடியின் கொள்கைகளால் 2018 ல் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். இந்தியாவின் பிரதமர் ஒரு நகைச்சுவையாளர் என்றும் விமர்சனம் செய்தார்.

குடியுரிமை சட்டவரைவை விரும்பும் அமித் ஷாவுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு உள்ளதாக கூறிய ராகுல்காந்தி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார்கள் என்றால், அவர்களை வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்றார். நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தை விசாரிக்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் இந்தியாவில் ஒவ்வொரு ஏழைகளின் வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

English summary
Rahul Gandhi in Tripura: I thought India was producing 450 jobs a day. Turns out Modi’s policies destroyed 1 crore jobs in 2018. That’s 27,000 jobs lost every single day of 2018. India’s PM is a joke
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X