For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம்.. ராகுல் காந்தி - ஹர்திக் பட்டேல் ரகசிய சந்திப்பு

ராகுல் காந்தி பட்டேல் இனத் தலைவர் ஹர்திக் பட்டேலை ரகசியமாக சந்தித்தார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

அகமதாபாத் : குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேலை ராகுல் காந்தி ரகசியமாகச் சந்தித்து இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க மிகவும் செல்வாக்குப் பெற்ற மாநிலம் குஜராத். பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

Rahul meets Hardik Patel of patel community in Gujarat

இவர்கள் இருவருக்கும் இங்கு கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் மிகவும் உன்னிப்பாக வியூகம் வகுத்து வருகிறார்கள். தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க தாமதித்து வரும் சூழலில் பல்வேறு நலத்திட்டங்களை அங்கு செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், குஜராத் அரசியலில் பா.ஜ.க.,விற்கு பட்டேல் சமூகத்தினர் எதிராக செயல்பட்டு வருகிறார்கள். மிகப்பெரிய வாக்குவங்கியான இவர்கள் இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டி ஹர்திக் பட்டேல் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

காங்கிரஸாருக்கும் அங்கு வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் இருக்கிறது. அவர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், குஜராத் சென்ற ராகுல் காந்தி தனது ஹோட்டல் அறையில் ரகசியமாக பட்டேல் தலைவர் ஹர்திக் பட்டேலை சந்தித்து இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்தச் சந்திப்பு உண்மையாக இருப்பின் பா.ஜ.க.,விற்கு மேலும் இந்தத் தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

English summary
Patel community leader had a secret meeting with Congress dy. chief Rahul Gandhi. that reported on a local media. if it is true it must be a great disaster to the BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X