For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமேதியில் தோற்ற ராகுல்.. மொத்த குடும்ப மானமும் ஒரே நாளில் காலி.. என்னத்த சொல்றது!

Google Oneindia Tamil News

அமேதி தொகுதியிலேயே ராகுல் காந்தி தோல்வியை சந்தித்தது அரசியல் ரீதியில் அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பல தசாப்தங்களாக இத்தொகுதியானது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியதால், ராஜீவ் காந்தியில் துவங்கி, சோனியா காந்தி, ராகுல் காந்தி வரை இந்த தொகுதியை ஆஸ்தான இடமாக கருதி போட்டியிட்டு வந்தனர்.

கடந்த 1967 முதல் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. 1977ல் ஜனதா கட்சியின் ரவீந்திர பிரதாப் சிங்கும், 1998ல் பாஜகவை சேர்ந்த சஞ்சய் சிங்கும் இடையில் வெற்றி பெற்றனர். மற்ற அனைத்து தேர்தல்களிலுமே இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் வென்றிருக்கிறது.

rahul requests smriti irani to take care of amethi

இந்த தொகுதியில் இருந்து ராகுல் காந்தியின் தந்தையும் மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி 4 முறை எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோன்று, ராகுல் காந்தியின் தாயும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியும் இத்தொகுதியில் இருந்து ஒருமுறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.

செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

கடந்த 2004ம் ஆண்டுக்கு பின்னர் இந்த தொகுதியின் எம்பி.,யாக மூன்று முறை ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதி பாஜக வசமாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் முன்மொழியப்பட்ட ராகுல் காந்தி அமேதி தொகுதியிலேயே கோட்டைவிட்டது பெரும் பின்னடைவாகவே இருக்கிறது.

அவரது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், இந்த தோல்வி பார்க்கப்படுகிறது. அவரை திடமான அரசியல் தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ரீதியில் விமர்சனம் எழுந்துள்ளது.

கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்! கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!

அமேதியில் தோல்வி பயம் காரணமாகவே, அவர் கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டிலும் போட்டியிட்டதாக பாஜக விமர்சனம் செய்தது. அதனை மெய்ப்பிப்பது போலவே, இந்த தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன. அதேநேரத்தில், வயநாடு தொகுதியில் இதுவரை இல்லாத வகையில் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ராகுல் காந்தி.

இந்த நிலையில், அமேதி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அமேதி தொகுதியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன் சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்

English summary
Congress president Rahul Gandhi has requested victorious BJP candidate Smiriti irani to take care of Amethi constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X