For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

55 நாட்கள் 'காணாமல் போய்' நாடு திரும்பினார் ராகுல்காந்தி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த 55 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று டெல்லி திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் நாடு திரும்பியுள்ளதை அடுத்து அவரது தாயார் சோனியாகாந்தியும், சகோதரி பிரியங்கா காந்தியும் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

லோக்சபா மற்றும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பின் கடந்த பிப்ரவரி 20ம் தேதி முதல் ராகுல்காந்தி ஓய்வில் இருந்து வந்தார் ராகுல் காந்தி. அவர் திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்தி எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார் என்று பலரும் கேட்டு வந்தனர்.

Rahul returns from vacation, Sonia, Priyanka reach his residence

ராகுல்காந்தியைப் பற்றி பல்வேறு வதந்திகளும் பரவியது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஊடக வெளிச்சம் படாத இடத்தில் ஓய்வெடுத்து வந்த ராகுல்காந்தி இன்று காலை 11 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். வியாட்நாமில் இருந்து வந்த விமானம் மூலம் அவர் டெல்லி வந்தடைந்ததாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

55 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் ராகுல்காந்தி இந்தியா திரும்பியதை அடுத்து இதுநாள்வரை பலவிதமாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராகுல்காந்தியை வரவேற்க அவரது இல்லத்தில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், தாயார் சோனியாகாந்தியும் இன்று காலை முதலே காத்துக்கொண்டிருந்தனர். ராகுல் வீட்டிற்கு வந்த உடன் இருவரும் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
As per media reports, Rahul landed at IGI Airport around 11 am today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X