For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளியால் இழைக்கப்பட்ட வீடுகள்... தங்கம், பிளாட்டுகள்.. ஆந்திராவை அதிர வைத்த அரசு அதிகாரியின் ஊழல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: 14 வீடுகள், வெள்ளி பொருட்களாலே வார்த்து இழைக்கப்பட்ட அறைகள், 1 கிலோ எடைக்கு தங்க பொருட்கள் என குவித்து வைத்துள்ளது வேறு யாருமல்ல, ஆந்திராவில், போக்குவரத்து துறையில் பணியாற்றும் சாமானிய அரசு ஊழியர்தானாம்.

பணிக்கு சேர்ந்து 34 வருடத்தில் இத்தனை சொத்துக்களை குவித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரை திகைக்க வைத்துள்ளார், 55 வயதாகும் பூர்ணச்சந்திர ராவ்.

Raids on Andhra officer reveal 14 homes, roomful of silver

1981ம் ஆண்டு, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டராக பணியை தொடங்கிய பூர்ணச்சந்திர ராவின், வாழ்க்கை, இப்படி பூத்து குலுங்கியது எப்படி என்று தலையை பிய்த்துக்கொள்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்.

குண்டூர், ஓங்கோல் மற்றும் நெல்லூர் நகரங்களில் இவர் பணியாற்றியபோது சட்டத்திற்கு விரோதமாக லஞ்சப் பணத்தை வாங்கி குவித்திருப்பது இந்த சொத்துக்களின் மூலம் அம்பலமாகியுள்ளது. இவருக்கு வினுகோண்டா பகுதியில் 7 அப்பார்மென்டுகள், 2 வீடுகள், குண்டூரில் 1 வீடு, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா நகரங்களில் தலா 2 பிளாட்டுகள் சொந்தமாக உள்ளன. வினுகோண்டாவில் இவர் ஒரு, தானிய மில்லுக்கு ஓனரும் கூட என தெரியவந்துள்ளது.

இத்தனையும் அம்பலமான பிறகும், தான் ஒரு ஒழுக்க சீலன் என கூறிவருகிறார் பூர்ணசந்திரராவ். தனது சொத்து மதிப்பு ரூ.3 கோடிதான் என்றும், இது வருமானத்திற்கு உட்பட்டதுதான் எனவும் அவர் கூறுகிறார். ஆனால் குறைந்தபட்சம் என்றாலும், ரூ.25 கோடிக்கும் குறையாக சொத்துக்கள் பூர்ணசந்திரராவுக்கு இருக்கும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்பாளர்கள். தொடர்ந்து சொத்துக்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

English summary
A Road Transport Authority employee in Andhra Pradesh's Guntur has apparently amassed within 34 years of service.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X