For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்- முக்கிய அம்சங்கள்

By Chakra
Google Oneindia Tamil News

-இனி ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்குப் பதில் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யலாம்

-9 ரயில் தடங்களில் ரயில்களின் வேகம் 160 முதல் 200 கி.மீயாக உயர்த்தப்படும்

-மும்பை- அகமதாபாத் இடையே அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்படும்

-ரயில்வே, தனியார் நிலங்களில் சோலார் பேனல்கள் அமைத்து 1,000 மெ.வாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படும்

-அதிக பயணிகள், சரக்குகளை கையாள வசதியாக ரயில் திட்டங்களுக்கு ரூ. 96,182 கோடி ஒதுக்கீடு

Railway Budget 2015-16 Live

-ரயில்வே பல்கலைக்கழகம் துவக்கப்படும்

-கடந்த ஆண்டில் 462 கி.மீ தூரம் தான் மின்மயமாக்கப்பட்டது. இந்த ஆண்டு 6,000 கி.மீ மின்மயமாகும்

-ரயில் பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்துக்கு இந்த ஆண்டு 1330% அதிக நிதி ஒதுக்கீடு

-முக்கிய ரயில் நிலையங்களில் லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் அமைக்க ரூ. 120 கோடி

-3438 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் நீக்கப்பட்டு, கண்காணிப்பு ஊழியர்கள் நியமிக்கப்படுவர்

-ரயில்வே பாதுகாப்பு திட்டங்களில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் உதவியும் நாடப்படும்

Railway Budget 2015-16 Live

-ரயில்வே நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க புதிய நிர்வாக அமைப்பு

-புதிய பாதைகள் அமைக்க பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்

-வாரணாசி பனாரஸ் பல்கலை.யில் ரயில்வே தொழில்நுட்ப ஆய்வுக்கு "மாளவியா இருக்கை"

-ரயில்களில் தீ விபத்தை தடுக்க வார்னிங் சிஸ்டம்

-ரயில்கள் மோதலைத் தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

-9 அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்

-சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்

-பழங்கள், காய்கறிகளை பாதுகாத்து கொண்டு செல்ல நவீன குளிரூட்டப்பட்ட மையங்கள்

-ரூ6 ஆயிரம் கோடி செலவில் 3 ஆயிரம் ஆளில்லா லெவல் கிராசிங்குகள் அகற்றப்பட்டு நடவடிக்கை

-ரயில்களி பாதுகாப்பு மற்றும் விபத்து தவிர்ப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

-ஸ்மார்ட் போன் மூலமும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டம்

-சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

-ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்

-ரயில்வேயில் அதிக முதலீட்டால் வேலை வாய்ப்பு பெருகும்

-9 வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படும்

-சிறப்பான விளக்கு வசதியுடன் ரயில் பெட்டிகளின் உள் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும்

-9,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படும்.

-முக்கிய ரயில்களின் படுக்கை வசதி எண்ணிக்கை உயர்த்தப்படும்

-புறநகர் பயணிகளுக்காக முக்கிய நகர்களில் சாட்டிலைட் முனையம் ஏற்படுத்தப்படும்

-முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களாக நீட்டிப்பு

-வயதான பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க வகை செய்யப்படும்

டெல்லி- கொல்கத்தா; டெல்லி- மும்பையை ஒரு இரவில் சென்றடையும் வகையில் விரைவு ரயில்கள்

-டெல்லி- மேகலாயா இடையே நேரடி ரயில் இயக்கப்படும்

-ரூ96 ஆயிரம் கோடியில் 77 விரிவாக்க திட்டங்கள்

-வடகிழக்கு மாநிலங்களுக்கான ரயில் சேவைக்கு முன்னுரிமை

-அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ. 8.7 லட்சம் கோடி முதலீடு

-400 ரயில் நிலையங்களில் வை பை வசதி

-முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் அன்-ரிசர்வ்ட் பயணிகள் 5 நிமிடத்தில் டிக்கெட் வாங்க புதிய வசதி

-இதற்காக 'Operation 5 Minutes' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

-டிக்கெட்டுகளை 4 மாதத்துக்கு முன்னரே ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்

-புதிய ரயில் பெட்டிகள் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன

-பயணிகள் வசதியை மேம்படுத்துவதற்கான நிதி 67% அதிகரிப்பு

-ரயில்வே மேம்பாட்டுக்கு நிதி வழங்கிய 2 எம்.பி.க்களுக்கு பாராட்டு

-இப்போதைய தண்டவாளங்களிலேயே 20% வேகமாக ஓடக்கூடிய புல்லட் ரயில் டிசைன் ரயில்கள் அறிமுகம்

-பயணிகளுக்கான வசதிகளை மேற்கொள்ள எம்.பி.க்கள் தங்களது தொகுதி நிதியை வழங்க வேண்டுகோள்

-ரயில்களின் வருகை, புறப்படும் நேரம் குறித்து எஸ்எம்எஸ் தகவல் அனுப்பப்படும்

-மேல் பெர்த்துகளில் ஏறுவதில் உள்ள சிரமத்தை குறைக்க புதிய மாடல் படிகள்

-முக்கிய ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

-ரயில் நிலையங்களில் வீல்சேர்களை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி

-ரயில்களின் உணவைத் தேர்வு செய்ய ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதி

-மும்பை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைக்கப்படும்

-மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு வீல்சேர்களை ஆன்லைன் மூலம் புக் செய்யலாம்

-பொதுபெட்டிகளிலும் மொபைல் சார்ஜர்கள் பொருத்தப்படும்

-பயணிகளை அழைத்து செல்லவும் இறக்கிவிடவும் சேவை தொடங்கப்படும்

-சில புறநகர் ரயில்கள், முக்கிய ரயில்களின் பெண்கள் பெட்டிகளில் கேமராக்கள்

-ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்து பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்

-முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கும் முறை எளிமையாக்கப்படும்

-ஸ்மார்ட் போன் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கலாம்

-முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் அன்-ரிசர்வ்ட் பயணிகள் 5 நிமிடத்தில் டிக்கெட் வாங்க புதிய வசதி

-டிக்கெட் புக் செய்யும் போதே உணவு வகைகளையும் புக் செய்யலாம்

-பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு: 182

-17 ஆயிரம் ரயில்வே கழிப்பறைகள் அகற்றப்படும்

-17,000 கழிப்பறைகள் பயோ-கழிப்பறைகளாக மேம்படுத்தப்படும்

-ரயில் பயணிகளுக்கான புதிய உதவி எண்: 138

-ரயில்வே கழிப்பிட வசதிகள் மேம்படுத்தப்படும்

-ரயில்களில் தூய்மை உட்பட பயணிகள் வசதிக்கு முன்னுரிமை

-ரயில் கட்டணம் உயர்த்தப்படாது- சுரேஷ் பிரபு

-ரயில்வேயை மேம்படுத்த 4 திட்டங்கள்

1. சிறந்த சேவை, 2. பாதுகாப்பான சேவை

3. ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவது

4. ரயில்வேயின் நிதி நிலைமை மேம்படுத்துவது

-அடுத்த 5 ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி ரயில்வே துறையில் முதலீடு செய்யப்படும்

English summary
Watch railway budget 2015-16 live from Parliament
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X