For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட் 2016

By Veera Kumar
Google Oneindia Tamil News

-ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிமுகம் இல்லை

-ரயில்வேயில் பொறியியல் மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் முறை அறிமுகம்

-ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை

-ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை

-அனைத்து மாநில மொழிகளிலும் "ரயில் பந்து" பத்திரிகை வெளியிட நடவடிக்கை

-அடுத்து வரும் ரயில்நிலையங்களை அறிவதற்கான ஜிபிஎஸ் வசதி பெட்டிகளில் அறிமுகப்படுத்தம்

-பெண் பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

-உள்ளூர் உணவுகள் பயணிகளுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

-2020ஆம் ஆண்டுக்குள் ரயில்வே வருவாயை ரூ4,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை

-தமிழகம், குஜராத், தெலுங்கானா அரசுகளுடன் இணைந்து புறநகர் ரயில்களை அதிகரிக்க நடவடிக்கை

-இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் ரயில்வே ஆட்டோ-ஹப் உருவாக்கப்படும்-சுரேஷ் பிரபு

-டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்

-சென்னை, ஹைதராபாத், அகமதாபாத்தில் புற நகர் ரயில் சேவை மேம்படுத்தப்படும்-சுரேஷ் பிரபு

-ரயில்வே உணவு மெனுவில் குழந்தைகளுக்கான உணவு, சூடான பால் அறிமுகம்-சுரேஷ் பிரபு

-ரயில் பயணிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு வசதி

-ரயில் பெட்டிகளில் எஃப்.எம். ரேடியோ வசதி ஏற்படுத்தப்படும்

Railway Budget 2016 Live

-ரயில் பயணிகளுக்கு டிராவல் இன்சூரன்ஸ் வழங்குவது பற்றி ஆலோசனை

-2ஆயிரம் ரயில் நிலையங்களில் 20,000 மெகா திரைகள் அமைக்கப்படும்

-பயண சீட்டை ரத்து செய்ய 139 எண்ணில் அழைக்கலாம்

-இ கேட்டரிங் சேவை 408 ரயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

-மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு ரயிலிலும் 120 கீழ்படுக்கைகள் ஒதுக்கீடு

-மாநில அரசுடன் இணைந்து பெங்களூர், திருவனந்தபுரத்தில் புறநகர் ரயில் சேவை-சுரேஷ் பிரபு

-லக்கேஜ் தூக்கும் தொழிலாளிகள் இனிமேல் கூலி கிடையாது. சகாயகாஸ் என அழைக்கப்படுவர்-சுரேஷ்பிரபு

-ஆட்டோமெட்டிக் கதவுகள், பார்கோட் ரீடர், பொழுதுபோக்கு டிவி ஸ்க்ரீன் வசதியோடு ஸ்மார்ட் கோச்சுகள் அறிமுகம்-சுரேஷ் பிரபு

-ஜப்பான் உதவியோடு அகமதாபாத்-மும்பை நடுவே அதிவிரைவு ரயில் திட்டம்-சுரேஷ் பிரபு

-பார்கோடு தொழில்நுட்பத்துடன் ரயில் டிக்கெட்டுகள் அறிமுகம்

-நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக தலங்களை இணைக்க ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு

-முழுவதுமே 3வது ஏசி வசதி பெட்டி கொண்ட ஹும்சபார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு

-அதிக பயணிகள் நெரிசல் உள்ள வழித்தடங்களில் இரவு நேர டபுள்-டக்கர் ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு

Railway Budget 2016 Live

-நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத சூப்பர்பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படும்

-பெண்களுக்கு லோயர் பெர்த்துகள் வழங்க கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்

-மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்துகள் 50% ஒதுக்கீடு

-டெல்லி- சென்னை உள்ளிட்ட சரக்குபாதை திட்டத்தை நிறைவேற்ற முன்னுரிமை

-குஜராத்தின் வதேராவில் உள்ள ரயில்வே அகாடமி ரயில்வே பல்கலைக் கழகமாக மாற்றம்

English summary
The Railway Budget 2016 is tabled in Parliament on Thursday by Minister Suresh Prabhu. While announcement of new trains is unlikely for the second consecutive year, a scheme for premium high-speed parcel trains is slated to be unveiled in the Budget. And passenger fare hike is also not expected
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X