For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2.3 கோடி பயணிகள்.. 26.5 லட்சம் டன் சரக்குகள்.. ரயில்வே துறை பற்றி சில 'புள்ளிவிவர' தகவல்கள்...

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாள்தோறும் நாட்டின் ரயில்களில் 2.3 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்ய இருக்கும் ரயில்வே பட்ஜெட் இந்த பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Railway Budget: Why You Need to Know These Numbers

நம்முடைய இந்திய ரயில்வே துறை பற்றிய சில புள்ளி விவரங்களை பார்க்கலாம்:

  • இந்தியாவில் இயக்கப்படும் ரயில்களில் நாள்தோறும் 2.3 கோடி பேர் பயணம் மேற்கொள்கின்றனர்.
  • நாடு முழுவதும் நாள்தோறும் 12,617 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 7,172 ரயில் நிலையங்களை இந்த ரயில்கள் கடந்து செல்கின்றன.
  • குறைவான பயண கட்டணங்களால் ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுதோறும் ரூ26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.
  • ரயில்வே வருவாயில் 67% சரக்கு கட்டணங்கள் மூலம் கிடைக்கிறது.
  • நாள்தோறும் 26.5 லட்சம் டன் சரக்குகளை ரயில்வே கையாள்கிறது
  • ரயில்வே துறையின் ஆண்டு வருமானம் என்பது ரூ1.40 லட்சம் கோடியாகும். இது பொதுத்துறை நிறுவனங்களான ஐ.ஓ.சி., ஓ.என்.சி.ஜி. ஆகியவற்றின் வருவாயை விட குறைவானது.
  • கிடப்பில் உள்ள 359 ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரூ1.82 லட்சம் கோடி தேவை
  • கடந்த 30 ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட 676 திட்டங்களில் 317 திட்டங்களே நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூ1.58 லட்சம் கோடி.
  • அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு தேவையான முதலீடு என்பது ரூ6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் ரூ50 ஆயிரம் கோடியை ரயில்வே நிர்வாகம் கேட்கக் கூடும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 0.5% குறைவு
  • ஆண்டுதோறும் 200 கி.மீ. ரயில் பாதை புதிதாக இணைக்கப்படுகிறது. கடந்த 67 ஆண்டுகளில் மொத்தம் 13 ஆயிரம் கி.மீ ரயில் பாதைகளே இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா உலகிலேயே 4வது மிகப் பெரிய ரயில் பாதை கொண்ட நாடு. மொத்தம் 64,460 கி.மீ. தொலைவு ரயில் பாதைகளைக் கொண்டுள்ளது.
  • ரயில்வே துறையில் மட்டும் 13.1 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் அதிக அளவு ஊழியர்கள் பணியாற்றும் துறையும் ரயில்வே துறைதான்.

English summary
Rilway Minister Suresh Prabhu will present his first Budget on Thursday. The Rail Budget is usually a low key affair, unlike the Union Budget, which is discussed and dissected for days. These numbers are important for understanding the Rail Budget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X