For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்டில் டிக்கெட் விலை உயர்வு, குறைப்பு குறித்த அறிவிப்பு ஒன்றும் இல்லை

பொது மற்றும் ரயில்வே சேர்ந்த ஒருங்கிணைந்த பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரயில் டிக்கெட் விலை அதிகரிப்பு, குறைப்பு பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.

Google Oneindia Tamil News

டெல்லி: 2017-18ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரயில் டிக்கெட் விலை உயர்வு அல்லது குறைப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ரயில்வே பட்ஜெட் என்றால் பயணிகள் அல்லது சரக்கு ரயில் கட்டண உயர்வு அல்லது குறைப்பு அறிவிப்பு கண்டிப்பாக வெளியாகும். அதனை பயணிகள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் என்று தனியாக தாக்கல் செய்யப்படவில்லை. பொது பட்ஜெட்டையும் ரயில்வே பட்ஜெட்டையும் சேர்ந்த ஒருங்கணைந்த பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Railway tariff not announced in budget

ரயில்வே பாதுகாப்பு, பயணிகள் வசதி, புதிய திட்டங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டம், பயோ டாய்லெட் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்தார்.

ஆனால் ரயில் கட்டண உயர்வு அல்லது குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், ஆண்டின் இடை இடையே ரயில் பயணிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Railway tariffs were not announced in Union budget today by Finance Minister Arun Jaitley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X