For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய "தட்கல் சிறப்பு ரயில்" திட்டம்... விரைவில் அறிமுகம்

Google Oneindia Tamil News

டெல்லி : விடுமுறைக்காலத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தட்கல் சிறப்பு ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும் மார்க்கங்கங்களில் இந்த ரயில் விடப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

புதிதாக தொடங்கப்படவுள்ள தட்கல் சிறப்பு ரயில்களில், சாதாரண ரயில் கட்டணத்தை விட 175 முதல் 400 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

தற்போது 2 ஆம் வகுப்புக்கு 10 % தான் கூடுதல்

தற்போது 2 ஆம் வகுப்புக்கு 10 % தான் கூடுதல்

தற்போது தட்கல் முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு 10 சதவீத கூடுதல் கட்டணமும், குளிர்சாதன வசதி உள்ளிட்ட இதர பெட்டிகளுக்கு 30 சதவீத கூடுதல் கட்டணமும் வசூலிக்கப் பட்டு வருகிறது.

கவுண்டர்களிலும் தட்கல் டிக்கெட்

கவுண்டர்களிலும் தட்கல் டிக்கெட்

பிரிமியம் ரயில்களுக்கு ஆன் லைன் மூலம் முன் பதிவு செய்ய முடியும். ஆனால் தட்கல் சிறப்பு ரயில்களுக்கு ஆன் லைன் மூலமும், ரயில்வே கவுண்டர்களிலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருவாயை பெருக்க முடிவு

வருவாயை பெருக்க முடிவு

ரயில்வே துறை வருவாயை பெருக்க இந்த முடிவை எடுத்துள்ளது, எனினும் இத்திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
Railway will soon introduce new talkal Scheme with fare hyke
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X