For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட்டுக்கு தனி இணையத்தளம்... 12 லட்சம் காகிதங்களை சேமித்தது ரயில்வே

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் குறித்த விவரங்கள் பிரத்யேக இணையதளத்தில் வழங்கப்படுகின்றன. http://www.railbudget2016.indianrailways.gov.in என்ற இணையளத்தில் ரயில்வே பட்ஜெட் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளாலம். இதன் மூலம் 12 லட்சம் ஏ4 காகிதங்களை ரயில்வே நிர்வாகம் சேமித்துள்ளது.

உலகின் 4வது பெரிய ரயில்வேயாக இருக்கும் இந்திய ரயில்வே துறைக்கு என ஒவ்வொரு ஆண்டும் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில் பாஜக அரசின் இரண்டாவது முழு ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கலாகிறது.

Railways' budget wing takes to IT to save costs

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்க விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரயில்வே பட்ஜெட்டில் பல சலுகைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சுரேஷ் பிரபு, நாட்டு நலனையும் ரயில்வே துறையின் நலனையும் கருத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான பட்ஜெட்டை அளிக்க முயற்சித்து இருப்பதாகவும் பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு அடிப்படை உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டதாகவும் கூறினார்.

கட்டண உயர்வை மட்டுமே நம்பியிருக்காமல் விளம்பரங்கள்,வணிகமயமாக்குதல், உபரி நிலம், போன்றவற்றின் மூலமாக ரயில்வேயின் வருவாயை அதிகரிக்கவும் இதற்கென பிரத்யேகமான இயக்குநரகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் குறித்த விவரங்கள் பிரத்யேக இணையதளத்தில் வழங்கப்படுகின்றன. http://www.railbudget2016.indianrailways.gov.in என்ற இணையளத்தில் ரயில்வே பட்ஜெட் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளாலம்.

ரயில்வே பட்ஜெட் தொடர்பான விவரங்கள் அனைத்தும் `பிங்க் புக் ' என்ற பெயரில் அச்சடிக்கப்படும். மேலும், மானிய கோரிக்கைகள் குறித்த விவரங்களும் அச்சடிக்கப்படும். இந்நிலையில், இந்த புத்தகங்களை இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே அச்சுப்பதிப்பது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மின்னணு முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 12 லட்சம் ஏ4 காகிதங்களை ரயில்வே நிர்வாகம் சேமித்துள்ளது.

English summary
In a green move which will also see it cut down on expenses, the Railway Ministry will be using 12 lakh A4 sheets less in presenting its Budget for the next fiscal, relying on IT tools instead to convey the information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X