For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை எதிர்கொள்ள ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்து?

பண்டிகை காலங்களில் பயணிகள் நெரிசலை எதிர்கொள்ளும் வகையில் ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பண்டிகை காலங்களில் ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய ரயில்கள் அறிமுகம்

புதிய ரயில்கள் அறிமுகம்

துர்கா பூஜை, தீபாவாளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்த 40 நாட்களில் வருகின்றன. இதையொட்டு அக்டோபர் 15 முதல் அக்டோபர் 30-ந் தேதி வரை புதிய ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

4,000 சிறப்பு ரயில்கள்

4,000 சிறப்பு ரயில்கள்

கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் 3,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. நடப்பாண்டில் 4,000 சிறப்பு ரயில்களை இயக்கப்படும்.

ஊழியர்கள் விடுமுறை ரத்து

ஊழியர்கள் விடுமுறை ரத்து

மேலும் பண்டிகை காலங்களில் அனைத்து ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை எதிர்கொள்ளும் வகையில் ஊழியர்களின் வி0டுமுறையை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கிறோம்.

ப்ளாட்பார்ம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்

ப்ளாட்பார்ம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்

பண்டிகை காலங்களில் முக்கிய ரயில் நிலையங்களில் பந்தல்களை அமைக்கவும் கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ப்ளாட்பார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு மனோஜ் சின்ஹா கூறினார்.

English summary
Union minister of state (Railways) Manoj Sinha said that the ministry was also considering cancelling the leave of all the staff to deal with the holiday rush.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X