For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி ரயில்களில் நோ "அரை" டிக்கெட்... முழு டிக்கெட் எடுக்கணும்... ரயில்வே துறை அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்களில் இனி குழந்தைகளுக்கு என தனிக்கட்டணம் கிடையாது. அவர்களுக்கும் முழு கட்டணம் செலுத்தினால் மட்டுமே தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தற்போது 5-12 வயதுள்ள குழந்தைகள் ரயிலில் பயணம் செய்யும் போது அரை டிக்கெட் கட்டணம் செலுத்தினாலே போதுமானது. அவர்களுக்கு தனி இருக்கை மற்றும் படுக்கை வசதி அளிக்கப்படும். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

Railways hikes fare for children from 5 to 12 years

இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப்படும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும், இனி, முழு டிக்கெட் தான் எடுக்க வேண்டும் என ரயில்வே அறிவித்தது.

அதன்படி, இந்தப் புதிய விதிமுறை அடுத்தமாதம் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைப்படி, பெரியவர்களை போல், 5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், முழு கட்டணம் செலுத்தினால் தான், அவர்களுக்கு தனியாக, இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும்.

இதன்மூலம், ரயில்வேக்கு ஆண்டுக்கு, 525 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

நல்லா இருங்கப்பா ரொம்ப ரொம்ப நல்லா இருங்க!

English summary
Railways has decided to charge the full ticket fare for children between the ages of five and 12 from April 22nd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X