For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு- அடுத்த வருடம் 75 சதவீதமாக அதிகரிக்க “டார்கெட்”

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வேயில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன் பதிவு அடுத்த ஆண்டில் 75 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அப்பிரிவின் புதிய உறுப்பினரான ஜாம்ஷத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே வாரியத்தின் போக்குவரத்து பிரிவின் புதிய உறுப்பினராக முகமது ஜாம்ஷத் டெல்லியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Railways to Increase Online Bookings up to 75 Percent

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வேயை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயணிகளின் உணவு வசதி, சுகாதாரம், டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

தற்போது தினமும் பயணிகள் ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்வது சராசரியாக 56 சதவீதமாக உள்ளது. இதை அடுத்த 3 ஆண்டுகளில் 75 சதவீதமாக அதிகரிப்பதே எங்களது லட்சியமாகும். இதுதவிர ரயில்வேயின் வருமானத்தை பெருக்க புதுமையான பல்வேறு வழிகளும் கண்டறியப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Railways will undertake steps to increase the online ticket bookings up to 75 per cent from the current 56 per cent of the total bookings in next three years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X