For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு சேவை வரி ரத்து: ரயில்வே அறிவிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இன்று முதல் இந்தாண்டு இறுதி (டிசம்பர் 31) வரை சேவை வரி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு பண பரிவர்த்தனையை குறைத்து ஆன்லைன் அல்லது டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை நடத்த ஊக்குவிக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு புதன்கிழமை முதல் சேவை வரியை ரத்து செய்கிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ந் தேதி வரை வழங்கப்படும் என ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

 Railways waives off service tax for booking online tickets

இதுவரை இணையதளம் மூலம் ரயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.20-ம், ஏ.சி. வசதி ரயில் டிக்கெட்டுக்கு ரூ.40-ம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது. இனி டிசம்பர் 31-ந் தேதி வரை இந்த கட்டணம் வசூலிக்கப்படாது. முன்னதாக வரும் 24ம் தேதி வரை ரயில் நிலையத்தில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை பயணிகள் கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

English summary
The Indian Railways on Tuesday announced that it would waive off service charges for E-tickets and I-tickets booked through Indian Railway Catering and Tourism Corporation Ltd (IRCTC) in a bid to encourage cashless transactions from November 23 to December 31, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X