For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கப்பு தாங்கல: ரயிலில் அளிக்கப்படும் போர்வைகளை தினமும் துவைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்களில் அளிக்கப்படும் போர்வைகளை தினமும் துவைப்பது என்று ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

ரயில்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் போர்வைகள் ஒரு மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை தான் துவைக்கப்படுகின்றன. அதனால் போர்வைகளில் இருந்து துர்நாற்றம் வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போர்வைகளை தினமும் துவைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Railways to wash blankets after every use

இது குறித்து ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

என்.ஐ.எப்.டி. டிசைன் செய்யும் போர்வைகளை வாங்க உள்ளோம். அந்த போர்வைகள் தினமும் துவைத்தாலும் கிழிந்துவிடாது. முதலில் சில பிரீமியர் ரயில்களில் இந்த புது போர்வைகள் பயன்படுத்தப்படும். அதன் பிறகு பிற ரயில்களிலும் புது போர்வைகள் வழங்கப்படும் என்றார்.

ரயில்களில் கலர் கலராக போர்வை, பெட்ஷீட் வழங்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து இனி வண்ணமயமான போர்வைகள், பெட்ஷீட்கள் வழங்கப்பட உள்ளன.

English summary
Smelly blankets may soon become a thing of past on trains, with the railways deciding to wash them after every use.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X