For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழையுடன் சூறாவளி காற்றும் சுழன்றடித்ததில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வட மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் சாலையில் ஆம்லட் போடும் அளவிற்கு கடுமையாக நிலவி வந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பாரத்பூர், ராஜ்சமாண்ட் உள்ளிட்ட இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டருக்கு மேல் வீசியதால் சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

 Rain and storms hit: 6 people have died across Rajasthan

சட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி! சட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி!

இந்த புயல் மழையில் சிக்கி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென பெய்த கனமழையால் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து நாசனமானது.

இதேபோல், தமிழகத்திலும் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. வெயிலில் காய்ந்து, நொந்து வந்த மக்களுக்கு கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
6 people have died across Rajasthan, in the rain and storms which hit various parts of the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X