For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தராகாண்ட் கனமழை: 2 நாளில் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தில் வியாழன் இரவு பெய்யத் தொடங்கிய கனமழை தொடர்கிறது. இதன் காரணமாக, யம்கேஷ்வர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. இதில் 12 பேர் பலியாயினர். மேலும் 5 பேர் கல்ஜிகல் மற்றும் த்வரிகல் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பலியாயினர்.

இந்நிலையில், இன்று அதிகாலை டேராடூனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர். வடமாநிலங்களில் மட்டும் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 77 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 250 பேரை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் உயிரிழப்பு

நிலச்சரிவில் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் வியாழன் இரவு பெய்யத் தொடங்கிய கனமழை வெள்ளி பகல் வரை நீண்டது. இதன் காரணமாக, யம்கேஷ்வர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. இதில் 12 பேர் பலியாயினர்.

வீடுகள் சேதம்

வீடுகள் சேதம்

கல்ஜிகல் மற்றும் த்வரிகல் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. இங்கு நிலச்சரிவுக்குப் மேலும் 5 பேர் பலியாயினர்.

பெருக்கெடுத்த வெள்ளம்

பெருக்கெடுத்த வெள்ளம்

தவிர, ரிஷிகேஷ் அருகே கங்கை ஆற்றில் அபாய அளவுக்குச் சற்றே குறைவாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையை ஒட்டி உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தவிக்கும் 250 பேர்

தவிக்கும் 250 பேர்

தொடர்ந்து கனமழை பெய்வதால் பவுரி மாவட்டத்தில் உள்ள புராலா பைராகர் கிராமத்தில் 250 பேர் சிக்கியுள்ளனர். சாலைகள் சேதமடைந்திருப்பதால் அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீட்புப்பணி தீவிரம்

மீட்புப்பணி தீவிரம்

உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஸ் ராவத், மீட்புப்பணியை முடுக்கிவிட்டுள்ளார். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

மோசமான வானிலை

மோசமான வானிலை

மாவட்ட நிர்வாகமும் டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர்களை அனுப்பக் கேட்டுள்ளது எனினும், வானிலை மோசமடைந்திருப்பதால் ஹெலிகாப்டர்களை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

டேராடூனில் நிலச்சரிவு

டேராடூனில் நிலச்சரிவு

இந்நிலையில், இன்று அதிகாலை டேராடூனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

பலி எண்ணிக்கை 70

பலி எண்ணிக்கை 70

இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி இரங்கல்

உத்தராகண்டில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலில் வெள்ளம்

ஹிமாச்சலில் வெள்ளம்

இதேபோல ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழை வெள்ளத்திற்கு 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலி எண்ணிக்கை 77

பலி எண்ணிக்கை 77

வட மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 77க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
20 people were killed in rain-related incidents in Uttarakhand and Himachal Pradesh as heavy showers wreaked havoc in the hill states even as humid conditions prevailed in most parts of north India on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X