For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நண்பன் பட எபெக்ட்.. வைரஸையே தூக்கி சாப்பிடும் சட்டீஸ்கர் சிறுமி.. 7ம் வகுப்பிலேயே இப்டி ஒரு சாதனையா?

நண்பன் பட சத்யராஜ் போல் ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதும் பழக்கத்தை கொண்டுள்ளார் ராய்ப்பூரைச் சேர்ந்த மாணவி காவ்யா சாவ்தா.

Google Oneindia Tamil News

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ஒருவர் நண்பன் பட சத்யராஜ் போல் ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் எழுதி அசத்துகிறார்.

ராய்பூரில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் மாணவி காவ்யா சாவ்தா. இவர் தான் ஒரே சமயத்தில் இரண்டு கைகளிலும் எழுதி அசத்துகிறார். அதுவும் ஒரு கையில் நேராக எழுதும் போது, மறுகையில் கண்ணாடி எழுத்து , அதாவது எதிர்திலையில் எழுதுகிறார்.

raipur based teenage girl perfects in mirror writing

காவ்யா இப்படி எழுதுவதற்கு நண்பன் படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரம் தான் காரணம். இந்த படத்தின் இந்தி பதிப்பான 3 இடியட்ஸ் படத்தை பார்த்த பிறகு தான் தனக்கு இதுபோல் எழுத வேண்டும் என தோன்றியதாகக் கூறியார் காவ்யா.

"இது போல் எழுதுவதற்கு நிறைய ஒருமுகப்படுத்துதல் அவசியம். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக இதை பயிற்சி செய்து வருகிறேன். 3 இடியட்ஸ் படத்தில் வரும் வைரஸ் கதாபாத்திரத்தை பார்த்து தான் இப்படி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது", என்கிறார் காவ்யா.

இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதுபோல் சரளமாக எழுதுகிறார் காவ்யா. முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத பழகியிருக்கிறார். பிறகு இந்தியில் எழுத ஆரம்பித்துள்ளா காவ்யா. ஆனால் காவ்யா இதனை முழுநேர வேலையாக செய்யவில்லை. தனது வீட்டு மற்றும் பள்ளி பாடங்களை எல்லாம் முடித்துவிட்ட பிறகு கிடைக்கும் நேரத்தில் தான் இதனை பயிற்சி செய்திருக்கிறார்.

இப்போதுள்ள பெரும்பான்னைமயான பிள்ளைகள் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், கையெழுத்து தலையெழுத்தைவிட மோசமாக இருக்கிறது. இந்த சூழலில் காவ்யா போல் ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும், அச்சு அடித்தது போல் என்பது அசாத்திய திறமை தான்.

English summary
In Raipur a school girl named Kavya Chawda perfects in mirror writing. She was inspired to practice this after watching AMir Khan's 3 idiots movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X