For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதியில் சாமி கும்பிட்டார்.. பெங்களூர் மாநாட்டில் பங்கேற்றார்.. ராஜபக்சே மனைவி!

Google Oneindia Tamil News

பெங்களூர்: ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி, திருப்பதி கோவிலுக்குச் சென்று சாி கும்பிட்டார். மேலும் பெங்களூரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாட்டில் நடந்த வாழும் கலை அமைப்பின் சர்வதேச மகளிர் மாநாட்டிலும் கலந்து கொண்டு அவர் உரை நிகழ்த்தியுள்ளார்.

ஷிராந்தியின் இந்திய வருகை குறித்த விவரங்கள் அவர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வரும் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

ஷிராந்தியின் வருகையையொட்டி பெங்களூரிலும், திருப்பதி கோவிலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

7ம் தேதி திருப்பதி விசிட்

7ம் தேதி திருப்பதி விசிட்

7ம் தேதி திருப்பதி கோவிலுக்கு வந்தார் ஷிராந்தி. திருமலைக்கு வந்த அவர் அன்று இரவு அங்கு தங்கியுள்ளார்.

ரிலையன்ஸ் கெஸ்ட் ஹவுஸில்

ரிலையன்ஸ் கெஸ்ட் ஹவுஸில்

திருமலையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்கிக் கொண்ட அவர் அடுத்த நாள் காலையில் கோவிலுக்குச் சென்றார்.

அதிகாலை தரிசனம்

அதிகாலை தரிசனம்

அதிகாலையில் திருப்பதி கோவிலுக்குச் சென்ற அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். மேலும், கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்த பிரசாதமும் ஷிராந்திக்கு வழங்கப்பட்டது.

பெங்களூர் மாநாட்டில்

பெங்களூர் மாநாட்டில்

அதன் பின்னர் பெங்களூர் வந்த ஷிராந்தி, வாழும் கலை அமை்பபு ஏற்பாடு செய்திருந்த 6வது சர்வதேச மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் சந்திப்பு

ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் சந்திப்பு

இந்த மாநாட்டுக்கு அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்திருந்தார். ஷிராந்தி, ரவிசங்கரையும் சந்தித்துப் பேசினார்.

ஆஷா போன்ஸ்லேவுடன் சந்திப்பு

ஆஷா போன்ஸ்லேவுடன் சந்திப்பு

அதேபோல மாநாட்டுக்கு வந்திருந்த பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லேவுடனும் ஷிராந்தி சந்தித்துப் பேசினார்.

English summary
Shiranthi Rajapakse, wife of Lankan president Rajapakse visited Tirupathi temple and attended the sixth international women’s conference organised by the Art of Living (AoL) in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X