For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர், சிங்களர் என்ற இன வேறுபாடு எனக்கில்லை: சொல்வது மகிந்த ராஜபக்சே!

Google Oneindia Tamil News

திருப்பதி : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே தமக்கு தமிழர், சிங்களர், இஸ்லாமியர் என்ற இன வேறுபாடு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக ராஜபக்சே போட்டியிடுகிறார். ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலுக்காக ராஜபக்சே திங்கள்கிழமையன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஏழுமையானை வழிபாடு நடத்த நேற்று திருப்பதி வந்தார் ராஜபக்சே. இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய ராஜபக்சே, எனக்கு தமிழர், சிங்களர் , இஸ்லாமியர் என்ற இன வேறுபாடு எதுவும் இல்லை என்று மட்டும் கூறினார்.

Rajapaksa worships at Tirupati

அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் தனி விமானம் மூலம் மீண்டும் அவர் இலங்கை புறப்பட்டுச் சென்றார்.

English summary
The Srilankan president Rajapaksa with his family today worshiped in Tirupati.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X