For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதவ மறுத்த ராஜஸ்தான் போலீஸ்? பறிபோன இன்ஸ்பெக்டர் உயிர்!

கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் போலீஸ் உதவ மறுத்ததாலேயே சென்னை இன்ஸ்பெக்டரின் உயிர் பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீஸ் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை

    ஜெய்ப்பூர்: கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் போலீஸ் உதவ மறுத்ததாலேயே சென்னை இன்ஸ்பெக்டரின் உயிர் பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொளத்தூர் புதிய லட்சுமி புரத்தில் முகேஷ் குமார் என்பாரின் நகைக்கடையில் கடந்த நவம்பர் 16ல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மாடிக் கடையை வாடகைக்கு எடுத்த கொள்ளையர் துணைவிட்டு 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர்.

    இந்த நகைக் கடை கொள்ளை தொடர்பாக ஏற்கனவே சென்ராம் , கேலாராம், சங்கர்லால், தவ்ராம் கைது செய்யப்பட்டனர். சென்ராமின் மகன் நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிக்க ராஜஸ்தானுக்கு தனிப்படை போலீஸ் சென்றிருந்தது.

    இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

    இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

    அப்போது கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் மதுரவாயல் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியப்பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். படுகாயமடைந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்கு காரணம்

    இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்கு காரணம்

    கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசாருக்கு ராஜஸ்தான் போலீசார் உதவவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுவே சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் உயிரிழக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் விரைவு

    ராஜஸ்தான் விரைவு

    இந்நிலையில் இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தனிப்படையை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் இருந்து கூடுதல் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

    தீரன் பட பாணியில்..

    தீரன் பட பாணியில்..

    மேலும் அம்பத்தூர் இணை ஆணையர் சந்தோஷ் ராஜஸ்தான் விரைந்துள்ளார். அண்மையில் வெளியான தீரன் திரைப்படம் பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பெரியபாண்டி குடும்பத்திற்கு ஆறுதல்

    பெரியபாண்டி குடும்பத்திற்கு ஆறுதல்

    இதனிடையே உயிரிழந்த பெரியபாண்டியின் குடும்பத்தினருக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆறுதல் தெரிவித்துள்ளார். ஆவடியில் உள்ள பெரியபாண்டியின் வீட்டிற்கு நேரில் சென்று ஆணையர் விஸ்வநாதன் ஆறுதல் கூறினர். துணை ஆணையர் சுதாகர், உதவி ஆணையர்கள் ஜான் சுந்தர், ஆர்பர்ட் வில்சன் உள்ளிட்டோரும் சென்றனர்.

    English summary
    Chennai Maduravayal police inspector Periyapandi killed in Rajastan by thefts. Kolathur inspector Munisekar iujured by the firing of thefts. Rajastan police refused to help Tamilnadu police to catch the thefts sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X