• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கும்பல்.. பதறிய கிராம மக்கள்.. ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு

|

ஜெய்ப்பூர்: ஒரு கோயில் பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறி பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நாளுக்கு நாள் வடமாநிலங்களின் வன்முறைகள் பெருகி வருகிறது.. அராஜகக்காரர்களின் அட்டகாசத்தையும் யாராலும் அடக்க முடியவில்லை.. குறிப்பாக கிராம பகுதிகளில், படிப்பறிவில்லாத காரணத்தினாலும்,

Rajastani Priest burnt alive over land issue and family holds protests

மூடநம்பிக்கைகளில் மூழ்கி திளைத்து விட்டதாலும் பெருமளவு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.. குறிப்பாக பெண் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. இதில் டாப் லிஸ்ட்டில் உள்ளது உத்தரபிரதேசம்தான்.. இதற்கு அடுத்து ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் உள்ளன.

இப்போதும் ராஜஸ்தானில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. கரோலி மாவட்டத்தில் புக்னா என்ற கிராமம் உள்ளது.. இங்குள்ள ராதாகிருஷ்ணன் கோயிலில் பூசாரியாக இருந்தவர் பாபு லால் வைஷ்னவ்.. 55 வயதாகிறது.. இவர் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் வந்திருக்கிறார்.. அதனால், அந்த பகுதியிலேயே ஒரு சிறிய வீட்டில் வசித்தும் வந்துள்ளார்.. மேலும், ஒரு வீடு கட்டவும் முயற்சி செய்து வந்திருக்கிறார்.

இந்த விஷயத்தை அறிந்த அதே பகுதியை சேர்ந்த உயர்ஜாதி வகுப்பினர் சிலர், வீடு கட்டும் இடம் தங்களுக்கு சொந்தமானது என்று சொல்லி பூசாரியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.. ஆனாலும், பூசாரிக்கு ஆதரவாக அந்த பகுதி மக்கள் இருந்து வந்தனர்.. ஒருகட்டத்தில் உயர்ஜாதியினர் தொடர்ந்து தகராறு செய்யவும், இந்த விஷயம் ஊர் பெரியவர்களிடம் சொல்லப்பட்டது... பிரச்சனையை கேட்ட அவர்களும், பூசாரி பக்கமே ஆதரவாக நின்றனர்,

இதனால் தரகாறு செய்த உயர்ஜாதியினர் ஆத்திரம் அடைந்து, பூசாரி வீடு கட்டும் இடத்திலேயே, ஒரு குடிசையை அமைத்து அந்த இடம் தங்களுடையதுதான் என்று ஆக்கிரமிப்பு செய்தனர்.. மேலும், பூசாரியின் விளைநிலத்தை தீயிட்டு எரித்தனர்.. கண்போல வளர்த்த பயிர்கள் எல்லாம் பற்றி கொண்டு எரிவதை பார்த்த பூசாரி பதறிடியத்து கொண்டு ஓடிவந்தார்.. உடனே, அந்த நபர்கள் பூசாரி மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டனர்.

எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்.. ஏற்க முடியாத கட்சிகள் வெளியே போங்க.. தெறிக்கவிட்ட கே.பி.முனுசாமி

உடம்பெல்லாம் தீ பரவியதால், பூசாரி கதறி துடித்தார்.. அவரது சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து, அவரை மீட்டு ஆஸ்பத்திரியல் சேர்த்தனர்.. எவ்வளவோ முயற்சி செய்தும், பூசாரியை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.. இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. மேலும் உயிரிழந்த பூசாரி குடும்பத்துக்கு நஷ்ட ஈடும் அளிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, உயிருக்கு ஆஸ்பத்திரியில் போராடி கொண்டிருந்தபோது, பூசாரி மரண வாக்குமூலம் ஒன்றை அளித்திருந்தார்.. அதனடிப்படையில் கைல்சா மீனா என்பவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. சம்பந்தப்பட்டவர்களை தேடியும் வருகின்றனர்.

இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது... எப்படி ஹத்ராஸ் சம்பவத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து அரசியலாக்கியதோ, அதுபோலவே, பாஜகவும், காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் விவகாரத்தை கூட்டி உள்ளது.. இதனால் பாஜக - காங்கிரஸின் அரசியல் மோதலும் அதிகமாகி வருகிறது.

 
 
 
English summary
Rajastani Priest burnt alive over land issue and family holds protests
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X