For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நாளை எம்எல்ஏக்கள் அவசர மீட்டிங்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏகள் ஆலோசனை கூட்டம் நாளை ஜெய்ப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாக முதல்வர் கெலாட் குற்றம்சாட்டியிருந்த நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.

ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ ஆட்சி நடந்து வருகிறது. கு துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலோட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கவிழும் ராஜஸ்தான் அசோக் கெலாட் தலைமையிலான காங். அரசு- சச்சின் பைலட்டுடன் பாஜக மும்முர பேச்சுவார்த்தைகவிழும் ராஜஸ்தான் அசோக் கெலாட் தலைமையிலான காங். அரசு- சச்சின் பைலட்டுடன் பாஜக மும்முர பேச்சுவார்த்தை

அதிருப்தி

அதிருப்தி

சச்சின் பைலட் முதல்வர் கெலாட் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக தகவல் வெளியான நிலையில், திடீரென தங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

ரகசிய இடத்தில்

ரகசிய இடத்தில்

இதற்கிடையே அதிருப்தியில் இருந்த துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

காங்கிரஸ் அறிவிப்பு

காங்கிரஸ் அறிவிப்பு

இந்நிலையில் பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும், சச்சின் பைலட்டுடன் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகவும் ஆனால் அந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதும் என்றும் கூறினார். பாஜக நினைத்தது நடக்காது என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் அவினாஷ் பாண்டே நமபிக்கை தெரிவித்தார்.

முதல்வர் கூட்டம்

முதல்வர் கூட்டம்

இதனிடையே முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம், ஜெய்ப்பூரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நாளை காலை 10.30மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றால் பிரச்சனை தீர்ந்துவிட்டதாக முடிவுக்கு வர முடியும். மாறாக பங்கேற்க வரவில்லை என்றால் பிரச்சனை தீவிரமாக உள்ளதாக கருதப்படும். எனவே நாளைய கூட்டம் காங்கிரஸ்க்கு முக்கியமானதாகும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி கர்நாடகா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆட்சியை பறிகொடுக்குமா அல்லது காப்பாற்றுமா என்பது நாளை ஓரளவு தெரிந்துவிடும்.

English summary
Rajasthan: A meeting of Congress Legislative Party will be held at Chief Minister Ashok Gehlot's residence at 10:30 am tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X