For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) திரும்பப் பெற வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கேரளா அரசுதான் உச்சநீதிமன்றத்திலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம்.

Rajasthan also Passes Resolution Against CAA

இதனை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கேரளாவை போல உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார்.

மின்சாரத் துறை கேங்மென் பணி நியமனத்தில் முறைகேடு.. சிபிஐ விசாரிக்க கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு! மின்சாரத் துறை கேங்மென் பணி நியமனத்தில் முறைகேடு.. சிபிஐ விசாரிக்க கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!

இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தான் சட்டசபையிலும் இன்று சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்தீர்மானத்தில், மத்திய அரசின் தீர்மானமானது அரசியல் சாசனத்தின் 14-வது சரத்துக்கு எதிரானது; மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறது இச்சட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.

English summary
Rajasthan Assembly also passed a Resolution Against CAA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X