For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகார் பெண்ணுக்கும் ராஜஸ்தான் இளைஞருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி?.. ஐசியூவில் சிகிச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனா எதையோ மறைக்கிறது.. இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை !

    டெல்லி: பீகார் பெண்ணுக்கும் ராஜஸ்தான் இளைஞருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். இந்த வைரஸ் நோயால் இதுவரை 2060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஹாங்காங், மெக்சிகோ, தைவான் நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைரஸை தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை சீனா மேற்கொண்டுள்ளது. விலங்குகளை விற்கவோ, வளர்க்கவோ, இறைச்சிக்காக பயன்படுத்தவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சத்தமின்றி பரவும் கொரோனா வைரஸ்.. பெங்களூர்வாசிகளின் நிலை என்ன? ஒரு குட் நியூஸ் இருக்கு! சத்தமின்றி பரவும் கொரோனா வைரஸ்.. பெங்களூர்வாசிகளின் நிலை என்ன? ஒரு குட் நியூஸ் இருக்கு!

    பிரம்மாண்ட மருத்துவமனை

    பிரம்மாண்ட மருத்துவமனை

    இந்த நிலையில் வுகானில் இதற்காக பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்படுகிறது. இன்னும் 6 நாட்களுக்குள் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. வுகானில் இன்னும் 250 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்தியர்கள் பலர் வெளியேறிவிட்டனர். இந்தியாவிலிருந்து சீனா சென்று படித்துவரும் மாணவர்கள் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

    புனேவில் ஆய்வகம்

    புனேவில் ஆய்வகம்

    மீதமுள்ள 6 பேர் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவ மாணவர் என கூறப்படுகிறது. அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    அது போல் சீனாவிலிருந்து பாட்னா திரும்பிய பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ் , நேபாளம், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட கொரோனா வைரஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Corona virus : Bihar and Rajasthan Students who studied in China and returned from their has virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X