For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தான் சட்டசபை...நம்பிக்கை வாக்கெடுப்பு...அசோக் கெலாட்...காங்கிரஸ் ஆட்சி தப்பியது!!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த சிக்கலுக்குப் பின்னர் இன்று முதன் முறையாக அவை கூடி இருக்கிறது. காங்கிரஸ் சட்ட அமைச்சர் சாந்தி குமார் தாரிவால் கொண்டு வந்து இருந்தார். இதன் மீது காங்கிரஸ் தலைவர்கள் பேசினர். இதற்குப் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

Chief Minister Ashok Gehlot led Rajasthan Government wins vote of confidence in the State Assembly

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நிலவிய அரசியல் மோதல் முடிவுக்கு வந்து இன்று சட்டசபை கூடியது. தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை அவைக்கு சச்சின் வந்தார். துணை முதல்வராக இருந்ததால், அவருக்கு முதல்வரின் இருக்கை அருகே இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது அவர் துணை முதல்வராக இல்லை. ஆதலால் அவரது இடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்துத் பேசுகையில், இதையும் சுவராஸ்யமாக பேசி சமாளித்தார் சச்சின். துணிச்சலான வீரர்கள்தான் எல்லைக்கு அனுப்பபடுவார்கள் என்றார்.

Chief Minister Ashok Gehlot led Rajasthan Government wins vote of confidence in the State Assembly

முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், ''நாட்டில் பல சமயம் கட்சிக்குள் அரசியல் வேற்றுமை இருந்துள்ளது. அது உங்களது கட்சிக்கும் (வசுந்த்ரராஜே சிந்தியா முதல்வராக இருந்தபோது) ஏற்பட்டுள்ளது. நாட்டில் தொலைபேசியை பதிவு செய்யும் கலாச்சாரம் இதற்கு முன்பு இல்லை. நீங்கள் கர்நாடகாவில், கோவாவில், மத்தியப்பிரதேசத்தில், மணிப்பூரில் என்ன செய்தீர்கள். ஜனநாயகம் பற்றி உங்களுக்கு கவலையில்லை. இந்தியாவை இன்று இருவர்தான் ஆட்சி செய்து கொண்டு வருகின்றனர். மாநிலத்தில் பைரோன்சிங் ஷெராவத் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரது ஆட்சியை கவிழ்க்க சதி நடந்தது. நான் பிரதமரை சந்தித்து, ஆளுநரை சந்தித்து அதுமாதிரியான செயலில் ஈடுபட மாட்டேன் என்று கூறினேன். டெல்லி தலைவர்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. என்னுடைய எம்.எல்.ஏ.க்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்'' என்றார்.

ராஜஸ்தான் சட்டசபை...இடம் மாற்றம்...சச்சினின் துணிச்சல் வீரர் பேச்சு!!.ராஜஸ்தான் சட்டசபை...இடம் மாற்றம்...சச்சினின் துணிச்சல் வீரர் பேச்சு!!.

இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சி தப்பியது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், ஆட்சி அமைக்க 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 101 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்த்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். மொத்தம் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

Rajasthan assembly: law and Parliamentary Affairs Minister Shanti Kumar Dhariwal tables proposal for a trust vote

பாஜகவுக்கு 72 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ராஷ்டிரிய லோக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மூவர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக உறுபினர்களின் ஆதரவு இருக்கிறது. இதனால், அசோக் கெலாட் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு பாஜக பின் வாங்கியுள்ளது. இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தோற்கடிக்கப்பட்டால், மீண்டும் ஆறு மாதங்களுக்கு கொண்டு வர முடியாது என்பதால், பாஜக முடிவை மாற்றிக் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Chief Minister Ashok Gehlot led Rajasthan Government wins vote of confidence in the State Assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X